ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்.. "கோட்டை விட்டுடுச்சே திமுக".. பாயிண்ட்டை பிடித்து கேள்வி.. என்னவாம்
ராஜேஸ்வரி பிரியா திமுகவை சரமாரியாக விமர்சித்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: மக்களிடம் விளம்பரம் தேடிக்கொள்வதில் திமுகவுக்கு இருக்கும் ஆர்வம், செயல்பாடுகள் என்ற விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவதாக, ராஜேஸ்வரி பிரியா விமர்சித்துள்ளார்.
பாமகவில் இணைந்து செயல்பட்டவர் ராஜேஸ்வரி பிரியா.. அக்கட்சியின் மாநில நிர்வாகியாகவும் இருந்தவர்.. அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததை கண்டித்து, பாமகவில் இருந்து விலகினார..
பின்னர், அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற பெயரில் புதுக்கட்சியை ஆரம்பித்து, பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
சமூக அக்கறை நிறைந்த ராஜேஸ்வரி பிரியா, இளைய சமுதாயத்துக்கு தேவையான கருத்துக்களை தன்னுடைய பேட்டிகள் மூலம் விடாமல் எடுத்து சொல்லி வருகிறார்.. அந்த வகையில் ஒரு டிவி சேனலுக்கு ராஜேஸ்வரி பிரியா அளித்துள்ள பேட்டியில் திமுகவை சரமாரியாக விமர்சித்திருந்தார்.. அதன் சுருக்கம்தான் இது:

கவர்ச்சி விளம்பரம்
தங்களை தாங்களே புரமோட் செய்து கொள்வது, மக்களிடம் விளம்பரம் தேடிக்கொள்வது இதுதான் அதிகம்.. இதையெல்லாம் சரியாகவே செய்கிறார்கள். ஆனால், செயல்பாடுகள் என்ற விஷயத்தில் திமுக கோட்டை விடுகிறார்கள்.. பழையபடி இருந்தால்கூட இந்த அளவுக்கு மழைநீர் தேங்காது.. புதிதாக திட்டம் போடுவதாக சொல்லி, அதை 3 மாத காலத்துக்கு முன்பு தொடங்கி, அதுவும் சரியாக மழைக்காலத்தில் தொடங்கி, அதை அரைகுறையாக விட்டுவிட்டு, அதன்விளைவுகள் ஏற்பட்டுவிட்டது.. சில மரணங்கள்கூட நடந்துவிட்டது..

ப்ரியா + நேரு
இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.. வெறும் வாய் வார்த்தைதான் இருக்கு.. 95 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டது என்று மேயர் சொல்கிறார்.. கேஎன் நேரு 75 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டதாக சொல்கிறார்.. இதில் எது உண்மை? மக்கள் எதை நம்புவது? ஊடகங்களும் ஒருதலைப்பட்சமாகவே இருக்காங்க.. நிறைய ஊடகங்கள் தங்கள் தன்மையையே மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.. மக்களுக்கான செய்திகளை தருவதில்லை.. மழைநீர்வடிகால் திட்டத்தை அவசரகதியில்தான் பணிகளை முடித்துள்ளனர்..

செல்போன் அடிமை
இதற்கு செலவு இரட்டிப்பாகிறது.. மக்களின் வரிப்பணம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.. இதற்கான வரிகள் மக்கள் தலையில் வைத்துவிட்டார்கள்.. தமிழக அரசு கடன் தொகையை ஏற்றிக் கொண்டே போகிறார்கள்.. இதற்கெல்லாம் சீர்திருத்தம் தேவைப்படுகிறது.. இதற்கு ஒரே வழி, இளைஞர்கள் அரசியலை நோக்கி தள்ளப்பட வேண்டும்.. ஆனால், இளைஞர்கள் போதையை நோக்கி தள்ளப்பட்டு விடுகிறார்கள், சினிமாவை நோக்கி தள்ளப்பட்டுவிடுகிறார்கள்.. இப்போது இளைஞர்கள் போனுக்கு அடிமையாகி விட்டார்கள். அதனால்தான் அரசியல் பக்கம் அவர்களை இழுக்க முடிவதில்லை..

சீரியல்கள்
இந்த கட்சிகளுக்கு நோக்கம் என்னவென்றால், பெண்களை சீரியல்களுக்கு அடிமையாக்கணும், ஆண்களை குடிக்க அடிமையாக்க வேண்டும்.. இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கணும்.. இப்படி எல்லாரையுமே அடிமையாக்கிவிட்டால், அரசியலை பற்றி சிந்திக்க வாய்ப்பே இருக்காது.. அதனால்தான், மாற்றம் வருமா? வராதா? என்ற ஏக்கத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.. மதுக்கடை நடத்துவது அரசாங்கம்.. பார் நடத்துவதற்கு அனுமதி தருவதும் அரசாங்கம்.. பாரும் நடத்திவிட்டு, ஒருவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று சொல்வதும் அரசாங்கம்தான்..

50 அடி தூரம்
குடித்துவிட்டு பயணம் செய்பவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த முடியாது.. அப்படியானால் இதுக்கு என்ன வழி? பார்களை இழுத்துமூட போகிறீர்களா அல்லது 50 அடிக்கு மதுக்கடைகளை திறந்து வெச்சிட போறீங்களா? பஸ், பைக்குகளில் போனால்தானே குடிகாரர்களுக்கு ஃபைன் போடறீங்க? 50 அடி தூரத்துக்கு ஒரு டாஸ்மாக்கை திறந்தால், நடந்தே போய் குடித்துவிட்டு, அவரவர் வீட்டுக்கு வந்துவிடலாமே.. அல்லது பார் பக்கத்திலேயே ஒரு ஹாலை கட்டிவிட்டு, குடிகாரர்கள் படுக்க வசதி செய்து தரலாமே.. என்னத்த சொல்றது? சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை நானும் முன்னெடுத்தேன்.. ஆனால், பலனில்லை.. மக்களிடம் விழிப்புணர்வு இல்லை.. இவைகளை எல்லாம் எதிர்த்து போராட முன்வருவதில்லை.

பிரிவினைவாத அரசியல்
கோவையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில், உளவுத்துறை பணி சரியாக நடந்ததா? அந்த உளவுத்துறையின் பணியை சரியாக செய்ய வைப்பது மாநில அரசின் கடமை.. இன்றைக்கு நடக்கக்கூடிய அரசியல் பிரிவினைவாத அரசியல்.. ஆனாலும் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, யாரையும் குற்றஞ்சாட்ட முடியாது.. அதனால்தான் உளவுத்துறையை குறை சொல்ல வேண்டியதாகிவிட்டது.. மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
-
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி












Click it and Unblock the Notifications