8 மணி நேரம், 100 கேள்விகள்.. துருவி துருவி கேட்ட அதிகாரிகள்.. ராஜேந்திர பாலாஜி பதில் என்ன தெரியுமா?
சென்னை: ரூ 3 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த ஜனவரி 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கே.டி. ராஜேந்திர பாலாஜி கடந்த ஜனவரி 13 ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்தார்.

விசாரணை
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக கே டி ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடிதம் கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து கே டி ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த சனிக்கிழமை விசாரணைக்காக ஆஜரானார்.

கே டி ராஜேந்திர பாலாஜி
அப்போது அவரிடம் தொடர்ந்து 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக கே டி ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேற்றும் ஆஜரானார். அவரிடம் மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்கள் குறித்தும் ஆதாரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

ஆவின் வேலைவாய்ப்பு
ஆவினில் வேலைவாய்ப்பு தருவதாக ஏமாற்றியது எப்படி, விஜய நல்லதம்பியுடன் முதலில் எப்போது பேசினீர்கள் உள்ளிட்ட கேள்விகள் ராஜேந்திர பாலாஜியிடம் எழுப்பப்பட்டன. இதில் சில கேள்விகளுக்கு ராஜேந்திர பாலாஜி பதில் அளிக்கவில்லை. விருதுநகரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன.

அதிமுக
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியிடம் நாள் முழுக்க விசாரணை நடத்தியது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அவரிடம் 130 க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் தெரிகிறது. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு உள்ளிட்டவை நகர்ப்புற தேர்தலில் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications