வெளியே வந்த முக்கிய விஷயம்?.. ப்ரூப் பண்ணுங்க.. போலீசாரையே விடிய விடிய திணறடித்த ராஜேந்திர பாலாஜி..!
ராஜேந்திர பாலாஜியிடம் 3 மணி நேர விசாரணை நடந்தது
சென்னை: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம், போலீசார் 3 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர்.. அது தொடர்பான சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
இத்தனை நாள் போலீசுக்கு தண்ணி காட்டி வந்த மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்றைய தினம் பெங்களூருவில் கைதானார்.. பிறகு நள்ளிரவு 1.15 மணியளவில் விருதுநகர் அழைத்துவரப்பட்டார். .. அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்கு பிறகு அவர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்கு மெடிக்கல் டெஸ்ட்கள் மேற்கொள்ளப்பட்டன...

தனிப்படை
அதேபோல, ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் தந்து, தப்பிக்க உதவியதாக கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக செயலாளர் ராமகிருஷ்ணன், பாஜக நிர்வாகிகள் நாகேஷ், ரமேஷ் உட்பட 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.. கைதான அனைவரையும் தனிப்படை போலீஸார் கார் மூலம் விருதுநகருக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியை கைது செய்தது எப்படி என்பது குறித்தும், கைதுக்கு பிறகு போலீசாரின் விசாரணைப்பிடியில் இருந்த ராஜேந்திர பாலாஜி என்ன சொன்னார் என்பது குறித்தும் பல்வேறு தகவல்கள் கசிந்து வருகின்றன..

ஸ்காட்லாந்து போலீஸ்
2 வாரங்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை ஒரு வழியாக கைது செய்ய வேண்டிய நெருக்கடி தமிழக போலீசாருக்கு ஏற்பட்டது.. ஸ்காட்லாந்து புலனாய்வு போலீஸுக்கு இணையாக பேசப்படும் தமிழக காவல்துறையினர், தொழில்நுட்பம் அதீத வளர்ச்சிப் பெற்றிருக்கும் இந்த காலக்கட்டத்தில் பிரபலமான ஒருவரை பிடிக்க முடியாமல் திணறுகிறதே என்று சோஷியல் மீடியாவில் பல்வேறு கிண்டல் கேலிகள் நிறைந்த பதிவுகளும் வெளியாகின.

அவமானம்
காவல்துறைக்கு பெருத்த அவமானமாக இது உருவெடுத்தது.. அத்துடன் போலீசார் மீது சந்தேகத்தையும் ஏற்படுத்திய நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் அவர் தாக்கல் செய்திருக்கும் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே அவரை கைது செய்ய வேண்டும் என்று தமிழக உள்துறையிலிருந்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு கடுமையாக உத்தரவிடப்பட்டதாம்.. அதன்பிறகே, ராஜேந்திரபாலாஜியை கண்டுப்பிடிப்பதில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது.

அதிரடி
அதன்பிறகே நேற்று ஒரு வழியாக அவரை சுற்றி வளைத்து கைதும் செய்து விட்டது போலீஸ்... கைது செய்யப்பட்ட அவரை விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு விடிய விடிய சரக டிஐஜி., மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர்... அவரிடம் கேட்கப்பட்ட எந்த ஒரு கேள்விக்கும் ராஜேந்திர பாலாஜி அசரவேயில்லையாம்.. பதிலுக்கு போலீசுக்கே பதில் கேள்வி கேட்டு டஃப் தந்துள்ளார்.

புகார்
"வேலை வாங்கித்தருவதாக என் மீது மோசடி புகார் தந்தவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்.. என்னிடம் அவர்கள் பணம் கொடுத்தார்கள் என்பதை நிரூபிக்கட்டும்... அல்லது நீங்கள் நிரூபியுங்கள். அப்படி நிரூபித்து விட்டால் விசாரணையின்றி தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்" என்று கெத்தாக பதில் சொல்லியிருக்கிறார்... அதுமட்டுமல்ல, வேலை வாங்கி தருவதாக யாரிடமும் பணம் வாங்கவில்லை என்றும் தெம்பாக சொல்லியிருக்கிறார்.
Recommended Video

மோசடி குற்றச்சாட்டு
மோசடி குற்றச்சாட்டு தவிர மற்ற புகார்கள் குறித்து போலீசார் கேட்ட பல கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கும் தெரியாது என்று பிடி கொடுக்காமல் பதில் சொல்லியிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி... இதனால் போலீசார் அடுத்தடுத்த கேள்விகளை கேட்க முடியாமல் திணறி உள்ளனர்.. போதுமான விவரங்களையும் பெற முடியாமல் போனதாக தெரிகிறது.. நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் இனி அடுத்தடுத்து பல்வேறு தகவல்களை அவரிடம் பெற்றுவிடுவார்கள் என்று நம்பப்படுகிறது..!
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications