அசிங்கப்படுத்தி வீடியோ போடுவாங்களாம்.. நான் அவங்க ஜாதி இல்லையே.. பாமக மீது ராஜேஸ்வரி பிரியா புகார்
பாமகவினர் மீது ராஜேஸ்வரி பிரியா கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: "என்னை பத்தி பாமகவினர் தவறாக சித்தரிக்கிறாங்க.. அவங்க ஜாதி நான் இல்லை என்பதால் இப்படி பாமக துன்புறுத்துதோ என்று சந்தேகமாக இருக்கு" ராஜேஸ்வரி பிரியா பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
சமீபத்தில் பாமக அதிமுகவுடன் ஏற்படுத்தி கொண்ட கூட்டணி பிடிக்காமல், அதிருப்தியால் கட்சியை விட்டே வெளியே வந்தவர் ராஜேஸ்வரி பிரியா! இவர் இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அவர் சொல்லி இருப்பதாவது:
"நான் இப்பதான் பாமகவில் இருந்து வெளியே வந்தேன். பிரஸ் மூலமா சொல்லிட்டுதான் வந்தேன். ஆனால் இதன் தொடர்ச்சியாக பாமக தொண்டர்கள் எனக்கு ஆபாசமான பின்னூட்டங்கள் தந்து கொண்டே இருக்கிறார்கள்.

பனிமலர் வீடியோ
சரி, ஏதோ அவர்கள் கோபத்தில் இருப்பார்கள், அதனால் நான் பொறுமையாதான் இருந்தேன். நேற்று ஒரு முகநூலில் ஒரு பதிவு போட்டிருந்தாங்க.. பனிமலர் வீடியோ போல உங்கள சித்தரிக்க போறோம்ன்னு பதிவு போட்டிருந்தாங்க. அதனாலதான் இது பத்தி கம்ப்ளைண்ட் தர தீவிரமா நான் முடிவு பண்ணேன்.

எனக்கே மிரட்டலா?
ஏற்கனவே பொள்ளாச்சி சம்பவத்தில் நாம் கண்ணீர் விட்டு கொண்டு இருக்கும் சமயத்தில்கூட, இவ்வளவு தைரியமா வீடியோ போடுவேன்னு சொல்றாங்க. ஒரு பொதுத்தளத்துக்கு வந்திருக்கிற ராஜேஸ்வரி பிரியாவுக்கே இந்த மிரட்டல் இருக்குன்னா சாதாரண பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு?

அறுக்கணும்
தொடர்ச்சியாக யூடியூப் போன்ற சேனல்களில் இது பற்றி தவறான பின்னூட்டங்களையும், கருத்துக்களையும் யார் தெரிவிச்சாலும், அவங்களை வேரோட அறுக்கணும் என்பதுதான் என்னோட நோக்கம். நாளைக்குதான் ஒரு கட்சி தொடங்க போறோம். அதை நாளை அறிவிக்க போறோம். இதுக்காகத்தான் பாமக தரப்பில் இப்படி என்னென்னவோ செய்துட்டு இருக்காங்க.

வேடிக்கை பார்க்கிறது
இதை கண்டுக்காம போய்ட்டா, ஏன் நடந்தபோது அப்பவே சொல்லலனு நமக்கே ஒரு கேள்வி வரும். நேற்று பதிவு போட்டிருந்தவர், " மாணவர் சங்க செயலாளர்"ன்னு பெயர் போட்டிருந்தது. நான் கட்சியிலிருந்து வெளியே வந்துகூட இதுவரைக்கும் பாமக பற்றி எதுவுமே வெறுப்பாக பேசியதே இல்லை. ஆனால் என்னை பற்றி தவறாக பேசுவதையும், பதிவு போடுவதையும், ஏன் பாமக வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறது? ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது?

கண்டிக்கறேன்
கட்சி உடனடியாக இதுக்கு ஒரு விளக்கம் தரணும். இப்படியெல்லாம் பெண்களை தவறாக சித்தரிக்க கூடாது என்று அறிக்கை தரணும். பெண் சாதிக்கணும்னு நினைக்கறது தவறா? பெண்கள் சாதிக்கணும்னு நினைச்சாகூட ஒரு சில மிருகத்தனமாக இருக்கும் ஆண்கள் இப்படி மனக்கஷ்டத்தை தர்றாங்க. அவங்கள நான் வன்மையா கண்டிக்கிறேன்.

அவங்க ஜாதி இல்லை
இதுவரைக்கும் பாமகவில் 2 வருடம் இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு தொந்தரவும் அப்போ எனக்கு இல்லை. இப்போது வெளியே வந்துவிட்டேன். தொந்தரவு வர ஆரம்பிச்சிருக்கு. அவர்கள் ஜாதி பெண்களுக்கு இப்படி ஒரு துன்புறுத்தல் அங்கே இல்லை. அவங்க ஜாதி நான் இல்லை என்பதால் என்னை இப்படி துன்பப்படுத்தறாங்களோன்னு தெரியல. ஆனா இதுகூட காரணமாக இருக்கலாம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications