தேர்தலை விட்டு ஒதுங்கினார் அர்ஜூன மூர்த்தி.. ரோபாவெல்லாம் வைத்து மீட்டிங்கெல்லாம் போட்டாரே பாவம்!
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தி பங்கேற்க வேண்டாம் என்று இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி முடிவு எடுத்துள்ளது என்று அர்ஜூனமூர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி போட்டியிடப்போவதில்லை என்று அந்த கட்சியின் நிறுவனரும் தலைவருமாக அர்ஜூனமூர்த்தி கூறியுள்ளார். எங்கள் கட்சிக்கு அளித்த மகத்தான ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி. இந்த தேர்தலில் எங்களுடன் கூட்டணி வைக்கவும் . ஒத்துழைப்பு அளித்த மற்ற கட்சிகள் அமைப்புகளுக்கு நன்றி எனவும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறினார் ரஜினிகாந்த், அதனை நம்பி பாஜகவில் இருந்து விலகி ரஜினியிடம் சென்றார் அர்ஜூனமூர்த்தி. ரஜினிகாந்த் தொடங்காத கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர் அர்ஜுனமூர்த்தி.
கொரோனா காலம், உடல்நிலையைக் காரணம் காட்டி ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்தார். எந்த சூழ்நிலையிலும் ரஜினியுடன்தான் இருப்பேன் என்று சொன்ன அர்ஜூனமூர்த்தி திடீரென இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியை சமீபத்தில் ஆரம்பித்தார்.
|
அர்ஜூனமூர்த்தி தேர்தல் அறிக்கை
தேர்தலில் போட்டியிடும் வேகத்தோடு சின்னமாக ரோபோவை அறிமுகம் செய்தார் அர்ஜூனமூர்த்தி. பரபரப்பாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தமிழகத்தை 4 மண்டலமாக பிரித்து 4 துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள். குடும்பஅட்டைதாரர்களுக்கு தினமும் 500 மி.லி. முதல் 1 லிட்டர் வரை இலவச பால் வழங்கப்படும். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேருந்து பயண அட்டையுடன் பெட்ரோல் அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை பயன்படுத்தினால், மாநில அரசின் விற்பனை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றார்.

இலவச போக்குவரத்து வசதி
10-ம் வகுப்பு வரை விவசாயப் பாடம் கட்டாயம். 60 வயதை கடந்து பொது வாழ்வில் இருப்பவர்களை கவுரவிக்க நல்லோர் குடியிருப்பில் வீடு வழங்கப்படும். தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் விவசாயம் என்ற ஸ்மார்ட்விவசாய திட்டம் செயல்படுத்தப்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இலவச போக்குவரத்து வசதி, இரவு நேர பேருந்து பயணத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றெல்லாம் அதிரடியாக தெரிவித்தார்.

அர்ஜூனமூர்த்தியின் அதிரடி
நாங்கள் ஆட்சிக்குவந்தால் ஊழலை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுப்போம். வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. நான் 4 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளேன். அதில் ஒரு தொகுதியில் போட்டியிடுவேன். அதிர்ஷ்டவசமாக ரோபோ சின்னம் கிடைத்துள்ளது என்று சொன்னார்.

தேர்தலில் போட்டியில்லை
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார் அர்ஜூனமூர்த்தி. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தி பங்கேற்க வேண்டாம் என்று இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி முடிவு எடுத்துள்ளது.

வலுப்படுத்துவோம்
நாங்கள் தொடர்ந்து எங்கள் கொள்கையின் அடிப்படையில் களபலத்தை வளர்த்துக் கொள்வோம் . மேலும் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாற்று சக்தியாக இருப்பதற்கான எங்கள் பணியை வலுப்படுத்துவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி வைக்க வந்தர்களுக்கு நன்றி
அனைவரின் ஆதரவோடு சற்றும் தொய்வில்லாமல் நமது மாநிலத்திற்கும், நாட்டிற்கும் ,சத்தியம், சமத்துவம் மற்றும் சமர்ப்பணம் ஆகிய எங்கள் கொள்கையின் அடிப்படையில் தொடர்ந்து சேவை செய்வோம். எங்கள் கட்சிக்கு அளித்த மகத்தான ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி. இந்த தேர்தலில் எங்களுடன் கூட்டணி வைக்கவும் . ஒத்துழைப்பு அளித்த மற்ற கட்சிகள் அமைப்புகளுக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார் அர்ஜூனமூர்த்தி.

ரஜினி, தமிழருவி மணியன் வழி
கட்சி ஆரம்பிப்பேன் அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன ரஜினிகாந்த் அரசியலை விட்டே விலகினார். காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்து விட்டார். அர்ஜூனமூர்த்தி கட்சி ஆரம்பித்து, சின்னத்தை அறிமுகம் செய்து தேர்தல் அறிக்கை எல்லாம் வெளியிட்ட பின்னர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறியுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் யாரும் முன்வரவில்லையோ என்னவோ.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications