Rajinikanth: நல்ல அறிக்கை.. பாஜகவை புகழ்ந்த ரஜினிகாந்த்.. தேர்தலில் மறைமுக ஆதரவு அளிக்கிறாரா?
லோக்சபா தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த பாஜக கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த பாஜக கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. நாளை மறுநாள் லோக்சபா தேர்தல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் என்ன முடிவெடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் அளித்து இருக்கும் பேட்டி பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

ரஜினிகாந்த் அறிக்கை
கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில், லோக் சபா தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். தமிழக சட்டசபை தேர்தல்தான் எங்கள் இலக்கு. லோக்சபா தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை. ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரை எந்தக்கட்சியும் தேர்தல் நேரத்தில் பயன்படுத்த கூடாது, என்று குறிப்பிட்டு இருந்தார்.

தண்ணீர் பிரச்சனை
அதேபோல் தண்ணீர் பிரச்சனைதான் தற்போது பெரிய பிரச்சனை. அதை தீர்க்கும் கட்சிதான் ஆட்சி செய்ய வேண்டும். அதை நிரந்தரமாகத் தீர்த்து வைக்கும் திட்டங்களை வகுத்து, அதை உறுதியாக செயல்படுத்துபவர்கள் என்று யாரை நம்புகிறீர்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ரஜினி குறிப்பிட்டு இருந்தார்.

கமல்ஹாசன் என்ன
இதற்கு இடையில் கமல்ஹாசன் ரஜினியிடம் தேர்தலில் ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை வைத்து இருந்தார். அதேபோல் ரஜினி ஆதரவு தருவார் என்றும் கூட கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் ரஜினி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறிவிட்டார்.

பாஜக அறிக்கை
ஆனால் அதே சமயம் பாஜகவின் தேர்தல் அறிக்கையை அவர் பாராட்டி இருக்கிறார். அதில், பாஜக கட்சி வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு பற்றி கூறியிருந்ததை வரவேற்கிறேன். மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும், என்று ரஜினி குறிப்பிட்டு இருக்கிறார்.

இரண்டாவது முறை
இதன் மூலம் இரண்டாவது முறையாக நதிகள் குறித்து ரஜினி பேசி இருக்கிறார். ஏற்கனவே தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்றார். தற்போது பாஜகவின் தண்ணீர் கொள்கைகளை பாராட்டி அவர் பேசி இருக்கிறார். இதன் மூலம் பாஜகவிற்கு ரஜினி மறைமுக ஆதரவு அளிக்கிறாரா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

நதிகள் இணைப்பு
பாஜக 2014 தேர்தல் அறிக்கையிலேயே நதிகள் இணைப்பு குறித்து வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால் அதை ஐந்து வருடமாக நிறைவேற்றவில்லை. ஆனால் தற்போது மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும் என்று ரஜினி கூறி இருப்பது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

என்ன கேள்வி
பாஜகதான் இத்தனை வருடமாக ஆட்சியில் இருந்தது. அப்போது ஏன் நதிகளை இணைக்கவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் ரஜினி இப்படி சுற்றிவளைத்து பேசுவதற்கு பதிலாக தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று வெளிப்படையாக கூறி விடலாமே என்றும் பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications