மனசை உறுத்திய அந்த விஷயம்.. மீண்டும் மீட்டிங் போடும் ரஜினிகாந்த்.. 4 முக்கிய காரணங்கள்!
நடிகர் ரஜினிகாந்த் திடீர் என்று மீண்டும் மாவட்ட செயலாளர்களை நாளை சந்திக்க மூன்று காரணங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் திடீர் என்று மீண்டும் மாவட்ட செயலாளர்களை நாளை சந்திக்க மூன்று காரணங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
Recommended Video
கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த் தன் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சந்திப்பு நடத்தினார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது. கட்சி தொடங்குவது தொடர்பாக ரஜினிகாந்த் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டார்
தற்போது மீண்டும் ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார். நாளை காலை 8 மணிக்கு சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்த கூட்டம் நடக்கிறது.

மீண்டும்
அவர் இப்படி மீண்டும் மாவட்ட செயலாளர்களை நாளை சந்திக்க மூன்று காரணங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதன்படி முதல் விஷயம் பாஜகவுடனான கூட்டணி குறித்து பேசுவார்கள் என்கிறார்கள். பாஜகவுடன் சேர்வது சரியாக இருக்குமா? பாஜகவுடன் சேர்ந்தால் தமிழகத்தில் வெல்லமுடியுமா, தனியாக போட்டியிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்குமா? தனியாக போட்டியிட்டுவிட்டு அதன்பின், பாஜகவுடன் இணைய முடியுமா என்று நாளை ஆலோசனை செய்ய உள்ளனர். நாளை இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க ரஜினி தரப்பு திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.

ஏமாற்றம்
அதற்கு அடுத்தபடியாக ரஜினி தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் குறித்து செயலாளர்களிடம் வெளிப்படையாக பேசுவார் என்றும் கூறுகிறார்கள்.கடந்த ஆலோசனையில் ரசிகர்கள் சொன்ன சில விஷயங்கள் ரஜினிக்கு பிடிக்கவில்லை என்கிறார்கள். இதை ரஜினி நாளை விளக்க போகிறார். தன்னை உறுத்தும் அந்த விஷயம் என்னவென்று ரஜினி இன்று செயலாளர்களிடம் வெளிப்படையாக பேசுவார் என்றும் கூறுகிறார்கள்.

அதிமுக
மூன்றாவதாக தமிழகத்தில் அதிமுக அல்லது கமல்ஹாசனுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக பேச உள்ளனர். பாஜகவுடன் சேர கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டால் அதிமுகவுடன் தனியாக கூட்டணி வைக்க முடியுமா? கமல்ஹாசனுடன் கூட்டணி வைக்க முடியுமா என்றும் ஆலோசிக்க உள்ளனர். கடந்த ஆலோசனை கூட்டத்தில் செயலாளர்கள் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மாநாடு எப்படி
கடைசியாக மாநாடு குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளனர். கட்சி தொடங்கும் போது பெரிய மாநாட்டை நடத்த நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். இந்த மாநாடு எப்படி நடக்க வேண்டும் , எங்கு நடக்க வேண்டும் என்று ஆலோசனை செய்ய உள்ளனர். இந்த மாநாடுதான் ரஜினியின் அரசியலுக்கு அடையாளமாக இருக்கும் என்பதால், இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக நாளை முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்.












Click it and Unblock the Notifications