தமிழ்நாடு உருப்படணும்னா ரஜினி முதல்வர் வேட்பாளர் ஆகணும் என்கிறார் துக்ளக் குருமூர்த்தி
ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தினால் தமிழ்நாடு உருப்பட வாய்ப்பு இருக்கிறது என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னை: ரஜினி தமது முடிவை மறு சிந்தனை செய்து, அவர் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தினால் தமிழ்நாடு உருப்பட வாய்ப்பு இருக்கிறது என்று துக்ளக் வார இதழ் ஆசிரியர் குருமூர்த்தி கூறியிருக்கிறார்.
Recommended Video
நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று பல ஆண்டுகளாக எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு அவர் அரசியலுக்கு வரப்போகும் செய்தி 2017ம் ஆண்டு தான் வந்தது. அதுவும் ரஜினியே வெளிப்படையாக அரசியலுக்கு வரப்போவதாகவும் கட்சி ஆரம்பிக்கபோவதாகவும் அறிவித்தார்.
கட்சி ஆரம்பிக்காவிட்டாலும் கடந்த இரண்டு வருடங்களாக மகிழ்ச்சியில் இருந்த ரஜினி ரசிகர்கள் பலரும் எம்எல்ஏ,அமைச்சர் கனவில் மிதந்தனர். ரஜினி தான் முதலமைச்சர் வேட்பாளர் என அவரது ரசிகர்கள் நினைத்து வந்தனர்.

ரஜினி கருத்து
கடந்த மார்ச் மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், விரைவில் கட்சி தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த அதேவேளையில் எனக்கு முதலமைச்சர் ஆசை இல்லை என்றும் கூறினார். இதனை ரசிகர்களாகிய நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் தெரிவித்தார். இந்த முடிவிற்கு அரசியல் நோக்கர்கள் பலரும் பலவித கருத்துக்களை கூறி வந்தனர்.

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி
இதுகுறித்து ரஜினி மறு சிந்தனை செய்ய வேண்டும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று துக்ளக் பத்திரிக்கையில், வாசகர் ஒருவர் துக்ளக் ஆசிரியரிடம் இது குறித்த கேள்வியை முன்வைத்தார். அதாவது ரஜினி மறு சிந்தனை செய்ய வேண்டும் என்று நீங்கள் மட்டும் கூறுவது எதை காட்டுகிறது என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.

மறுபரிசீலனை செய்வாரா ரஜினி
துக்ளக் வார இதழின் கேள்வி - பதில் பகுதியில் வாசகரின் இக்கேள்வி இடம்பெற்றுள்ளது. அதற்கு பதில் கூறியுள்ள குருமூர்த்தி, "ரஜினி தமது முடிவை மறு சிந்தனை செய்து, அவர் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தினால் தமிழ்நாடு உருப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை காட்டுகிறது" என்று பதில் கூறியுள்ளார்.

ரஜினி இன்னொரு எம்ஜிஆர்
ரஜினி அரசியலுக்கு தேவை என்றும் இன்னொரு எம்ஜிஆராக உருவெடுப்பார் என்றும் ஏற்கனவே குருமூர்த்தி கூறியிருந்தார். ரஜினிகாந்த் வந்தால்தான் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் அரசியலுக்கு ரஜினி வரவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்திருக்கிறார் குருமூர்த்தி இந்த நிலையில்தான் ரஜினி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினால் தமிழ்நாடு உருப்படும் என்று கூறியுள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications