ரஜினி வருவார் மாற்றத்தை தருவார்... வெளிநாடு வாழ் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

வெளிநாடுகளில் வாழும் ரஜினி ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருவார் மாற்றத்தை தருவார் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: we support Rajini என்று வெளிநாடுகளில் வாழும் ரஜினி ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருவார் மாற்றத்தை தருவார் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை ரீ ட்வீட் செய்துள்ளார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி தமிழ்நாட்டில் இருபதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தாலும் அதற்கு ஒரு தெளிவான பதில் எப்போதும் கிடைக்கவில்லை. மக்கள் மத்தியில் மாற்றத்திற்கான புரட்சி எழ வேண்டும், அதை நான் பார்க்க வேண்டும், அப்போதுதான் நான் வருவேன் என ரஜினிகாந்த் இதற்கு முன் கூறிய நிலையில் வீடியோ மூலம் அந்த மாற்றத்தைக் காட்ட அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

Rajini will come and bring change ... NRI Fans expect

சமீபத்தில் ரஜினிகாந்த் பெயரில் வெளியான அறிக்கை அவரது உடல்நலம் குறித்த தகவல்களை குறிப்பிட்டுள்ளதுடன் அதனால் அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பது போன்ற தகவலை தெரிவித்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த ரஜினி தன்னுடைய அறிக்கை இல்லை என்றாலும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல் உண்மை என்றார்.

இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் முடிவில் இருந்து பின் வாங்கி விட்டார் என்ற தகவல்கள் வெளியாகின. ரஜினிகாந்த் தனது முடிவை மாற்றிக் கொள்ளவேண்டும் என சிலர் அவரது வீட்டின் முன் கூடினர்.

ரஜினி ரசிகர்களோ அவர் கட்டாயம் அரசியல் களம் காண்பார் என்கிறார்கள். உடல்நிலையை காரணம் காட்டி பாஜகவை திசை திருப்பியுள்ள ரஜினிகாந்த் பொறுமையாக தனது முடிவை அறிவிப்பார் என தினசரியும் அவரது வீட்டின் முன்பாக சென்று வா தலைவா என்று அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் ரஜினி ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருவார் மாற்றத்தை தருவார் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். we support Rajini என்ற பக்கத்தை ஆரம்பித்து ரஜினிக்கு சப்போர்ட் செய்வதற்கான காரணத்தையும் கூறி வருகின்றனர்.

இந்த வீடியோவை ரஜினிகாந்தின் மகளும் அவரது சமூக வலைதளப் பக்கங்களை கையாள்பவருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் ரீ ட்வீட் செய்துள்ளார். அரசியலுக்கு வர யோசிக்கும் ரஜினிகாந்தின் முடிவில் எந்நேரமும் மாற்றம் நிகழலாம் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தமிழருவி மணியன், குரு மூர்த்தி போன்றோரும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+