Rajini Birthday: "குருனு சொல்லிட்டு.." ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூட சொல்லாத விஜய்.. விளாசும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டராக இருக்கும் ரஜினி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். பல்வேறு தரப்பினரும் காலை முதலே ரஜினிகாந்த்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள். இருப்பினும், இரவு வரையிலும் நடிகரும் தவெக தலைவருமான விஜய் வாழ்த்து சொல்லவில்லை. இதை ரஜினி ரசிகர்கள் இணையத்தில் கடுமையாகக் கண்டித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த்.. 1975ல் வெளியான "அபூர்வ ராகங்கள்" படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த், முதலில் வில்லன் உட்பட பல்வேறு கேரக்டர்களில் நடித்து வந்தார். அதன் பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த ரஜினிகாந்த், பாக்ஸ் ஆபீசில் வசூல் மன்னராக இருக்கிறார். அவரது ஸ்டைல் சர்வதேச அளவில் அவருக்கு ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது.

Rajinikanth 75th Birthday Vijay s Silence Sparks Outrage Among Fans No Wishes from Thalapathy Till Night

ரஜினி பிறந்த நாள்

50 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் பாக்ஸ் ஆபீசிஸ் அவரது இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. அவரது இடத்தைப் பிடிக்கப் பலர் முயன்ற போதிலும், அது முடியவில்லை.. அந்தளவுக்கு அசைக்கவே முடியாது வசூல் சக்கரவர்த்தியாக ரஜினிகாந்த் இருக்கிறார். இன்று டிசம்பர் 12ம் தேதி ரஜினி தனது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 170+ படங்களில் நடித்திருக்கும் ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்தாண்டு திரைக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து கமல் ஹாசன் தயாரிப்பிலும் ஒரு படத்தில் நடிகர் ரஜினி நடிக்கவுள்ளார்.

பிறந்த நாள் வாழ்த்து

ரஜினிகாந்த்திற்கு காலை முதலே பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைக் கூறினர். அரசியல் & திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர். அதேபோல நடிகர்கள் கமல், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர்.

இப்படி பல்வேறு தரப்பினரும் காலை முதலே ரஜினிகாந்த்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள். இருப்பினும், இரவு வரையிலும் நடிகரும் தவெக தலைவருமான விஜய் வாழ்த்து சொல்லவில்லை. கடந்தாண்டு ரஜினி பிறந்த நாளுக்கு 10 மணியளவில் ட்விட்டர் மூலம் விஜய் வாழ்த்து சொல்லி இருந்தார். ஆனால், இந்தாண்டு இரவு வரையிலும் கூட வாழ்த்து சொல்லவில்லை. இதைப் பல்வேறு ரஜினி ரசிகர்களும் கடுமையாகக் கண்டித்து வருகிறார்கள்.

விஜய் மீது தாக்கு

விஜய் தொடக்கக் காலத்தில் தனது பல படங்களில் தன்னை ரஜினி ரசிகராகக் காட்டிக் கொண்டவர்.. அப்படி செய்துவிட்டு இப்போது பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல கசக்கிறது என்கிற விஜய்யின் குணம் பல கேள்விகளைத் தருகிறது என்று சொல்லி காட்டமான கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக ரஜினி ரசிகர்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

பதிலடி

அதேநேரம் இதற்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். விஜய் ரசிகர் ஒருவர், "போன வருடம் டிசம்பர் மாதம் ரஜினி பிறந்த நாளுக்கு விஜய் வாழ்த்து சொன்னார்..ஆனால் கடந்த ஜூன் மாதம் விஜய் பிறந்த நாளுக்கு ரஜினி ஏன் வாழ்த்து சொல்லவில்லை? மதியாதார் தலை வாசல் மிதியாதே" என்று பதிவிட்டுள்ளார். இந்த பிறந்த நாள் வாழ்த்து மேட்டரில் இரு தரப்புமே மாறி மாறி இப்படி விமர்சித்து வருகிறார்கள். இது குறித்து நீங்க என்ன நினைக்கிறீர்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+