"சைலண்ட் மோடில் ரஜினி".. தாவ தயாராகும் அந்த 4 பேர் யார்.. உருவாகிறதா கூட்டணி.. பரபரக்கும் அதிமுக!
அதிமுக அமைச்சர்கள் ரஜினியுடன் தொடர்பில் இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
சென்னை: அதிமுக அமைச்சர்கள் பலர் ரஜினிகாந்த்துடன் தொடர்பில் இருப்பதாக தொடர்ந்து ஒரு தகவல் பரவிக் கொண்டே இருக்கிறது.. மற்றொரு புறம் அதிமுகவில் இருந்து ரஜினியுடன் யாரும் சேர மாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் தந்து கொண்டே இருக்கிறார்.. இவை எந்த அளவுக்கு உண்மை?
கடந்த ஏப்ரல் மாசமே கட்சியை ஆரம்பிக்க போவதாக தகவல்கள் வந்த நிலையில், இந்த கொரோனா வந்து எல்லாவற்றையும் தடுத்துவிட்டது.. எனினும், இந்த வருட தொடக்கத்தில் இருந்தே ரஜினியின் அரசியல் வருகை அதிகமாக பேசப்பட்டது.

ஒரு பக்கம் கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்.. இன்னொரு பக்கம் மா.செ.க்களுடன் ரஜினியே நேரடியாக பங்கேற்று பேசி அரசியல் குறித்த அவர்களின் கருத்தையும் கேட்டறிந்திருக்கிறார்.
எப்படி இரு தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லையோ, அதுபோலவே திமுக, அதிமுகவுடனும் கூட்டணி இல்லை.. இந்த 4 கட்சியுடன் கண்டிப்பா கூட்டணி இருக்காது. அதே நேரத்தில் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம்" என்று ரஜினி அப்போதைய கூட்டத்தில் பேசியதாக தகவல்களும் வந்தன. இதனிடையே தொற்றின் தீவிரம் தலைதூக்கிய நிலையில், இந்த பரபரப்புகள் மெல்ல அடங்கின.
பிறகு சில தினங்களுக்கு முன்பு, திரும்பவும் ரஜினியுடன் கூட்டணி குறித்து சில தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்ற தகவல் கசிந்தது. குறிப்பாக 3 அரசியல் தலைவர்கள் ரஜினியுடன் பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், என்னென்ன தொகுதிகள், எத்தனை தொகுதிகள் என்பது வரை அந்த தலைவர்கள் ரஜினியிடம் தெரிவித்து விட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அவர்கள் யார் என்பது நமக்கு சரியாக தெரியவில்லை.
ரஜினியின் அரசியல் வருகை குறித்த பேச்சு அடங்கிவிடக்கூடாதே என்று அடிக்கடி அவரை பற்றி பேட்டிகளை தந்து பரபரப்புகளை தருபவர் ரஜினியின் நண்பர் கராத்தே தியாகராஜன்.. ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று சொல்லி மீண்டும் நினைவுபடுத்தி விட்டு செல்வது போலவே, நேற்று முன்தினமும் வந்து பேட்டி தந்தார்.
அதனால் மறுபடியும் அரசியல் கூட்டணி பேச்சு பரபரப்பானது.. ஏற்கனவே அதிமுகவின் 4 அமைச்சர்கள் ரஜினியுடன் சேர தயாராகிவிட்டார்கள் என்று அப்போதே தகவல்களும் கசிந்தன.. இப்போதும் ரஜினிகாந்துடன் அதிமுக அமைச்சர் பலர் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இவை அனைத்தையும் அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார்.
"இது உண்மைக்குப் புறம்பான தகவல்... புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு விஸ்வாசமாக இருந்தது போல, புரட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு விஸ்வாசமாக இருந்தது போல, இப்போது அதிமுகவில் இருக்கும் அனைவரும் தலைமைக்கு விஸ்வாசமாக இருக்கும் நபர்கள். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் தாவும் துரோகிகள் அதிமுகவில் இல்லை" என்று கொதிப்புடனே சொல்லி உள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமாரின் இதே கருத்தை அவரது கட்சியில் உள்ள அமைச்சர்களுமே வெளிப்படையாக சொல்வார்களா என தெரியவில்லை.. அதேசமயம், "இன்னொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்று ரஜினி சொன்னதையும் அதிமுக அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடுமா என்றும் தெரியவில்லை.
Recommended Video
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications