திமுக, அதிமுகதானா.. பாஜக, பாமகவில் இல்லையா.. அது ஏன் ரஜினிகாந்த் "அந்த" வார்த்தையை சொன்னார்?!
அதிமுக, திமுக கட்சிகளை சரமாரி விமர்சிக்கிறார் ரஜினிகாந்த்
சென்னை: வெறும் பதவிதான்.. அதை வெச்சு சம்பாதிக்கணும்.. ஊழல்.. இதுதான் அதிமுக - திமுக என்று இரு கட்சிகளையும் குறி வைத்து ரஜினிகாந்த் பேசியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டுபண்ணி உள்ளது!
Recommended Video
பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினிகாந்த் அரசியல் குறித்த பேச்சினை தொடங்கி உள்ளார்... எடுத்த எடுப்பிலேயே நான் எப்போ 2017க்கு முன்பு அரசியலுக்கு வர்றதா சொன்னேன்? என்று ஒரே போடாக போட்டார். ஆனால் 1996ல் இருந்தே அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறேன் என்று மட்டும் உஷாராக பேசினார்.
ரஜினிகாந்த் பேசும்போது, கவனிக்கத்தகுந்த ஒரு விஷயம் அதிமுக, திமுகவை நேரடியாக சாடி பேசியதுதான்.. சிஸ்டம் சரி செய்யாமல் ஆட்சி நடந்தால் நன்றாக இருக்காது என்றவர் புதியவர்கள், இளைஞர்கள் கட்சிப் பதவிக்கு வருவதில்லை... அரசியல்வாதிகளின் வாரிசுகள்தான் வருகிறார்கள்..

ஊழல்
திமுக, அதிமுகவிடம் 50,000க்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. இவ்வளவு நமக்கு தேவையில்லை... இதனால் ஊழல் நடக்கிறது.. அவங்க சம்பாதிக்கிறாங்க.. வேற தொழில் அவங்ககிட்ட இல்லை... அதேபோல ஆளுங்கட்சி என்ற பெயரில் அவங்களும் சம்பாதிக்கிறாங்க.. தேர்தலுக்கு பிறகு இந்த பதவிகள் தேவையில்லை" என்கிறார் ரஜினி.

காங்கிரஸ்
இந்த விஷயத்தில்தான் நமக்கு இடிக்கிறது.. வாரிசுகள் என்றால் திமுக, அதிமுகவில் மட்டும்தான் இருக்கிறதா? தேசிய கட்சிகளானபாஜக, காங்கிரஸில் இல்லை என்கிறாரா? அல்லது உள்ளூரில் உள்ள பாமகவில்தான் இல்லை என்கிறாரா? கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அத்தனை கட்சிகளிலும் இதே சிஸ்டம்தான்... ஆனால் திமுக அதிமுக மட்டுமே இது போல வைத்திருப்பதாக ரஜினிகாந்த் சொல்லியிருப்பது உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது!

பிடிவாதம்
வட்டச் செயலாளர் தொடங்கி வார்டு செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை பல ஆயிரம் பதவிகளுடன் கிட்டத்தட்ட ஒவ்வொரு கட்சியும் இயங்கி வருகின்றன. ரஜினி நாளை கட்சி ஆரம்பித்தால் அவரும் இதுபோலத்தான் செயல்பட்டாக வேண்டும். இல்லை அப்படியெல்லாம் இருக்க மாட்டேன் , தேர்தலுக்கு மட்டும்தான் நீங்க தேவை என்று அவர் பிடிவாதம் பிடித்தால் அத்தனை பேரும் வேறு கட்சிக்குத்தான ஓடுவார்கள். இதுதான் எதார்த்தமும் கூட..

டெல்லி
காரணம் இது இந்தியா .. அமெரிக்கா அல்ல. அமெரிக்காவில்தான் கட்சி கிடையாது, கொடி கிடையாது.. ஏன் தலைவர் பொருளாளர் பொதுச் செயலாளர் கொபசெ என எதுவுமே கிடையாது. இப்படிப்பட்ட சூழல் இங்கு வர வேண்டுமானால் ஒட்டுமொத்த நாட்டையும் மாற்றியாக வேண்டும். அது எப்படி சாத்தியம் என்றுதான் தெரியவில்லை. ரஜினி கூறும் சூழல் மாற்றம் மக்கள் மாற்றம் எல்லாம் நடந்தால் கூட டெல்லி மாறணுமே.. அதுக்கு என்ன கியாரண்டி இருக்கு.. ரஜினி சொன்னால் டெல்லி மாறி விடுமா.. சான்ஸே இல்லையை!

திமுக
ஊழல் என்று வந்துவிட்டால் எல்லா கட்சிகளுக்கும்தான் அடக்கம்.. மநீம, நாம் தமிழர், கம்யூனிஸ்ட்கள் இவர்களை வேண்டுமானால் நாம் விட்டுவிடலாம்.. மற்றபடி எல்லாருமே ஊழலில் சிக்கியவர்கள்தான்... ஊழல் புகாருக்கு ஆளானவர்கள்தான்.. வாரிசு சர்ச்சைகளுக்குள் புகுந்து களை கட்டியவர்கள்தான்.. இதற்கு திமுக, அதிமுக கட்சிகளை மட்டும் ரஜினி சொல்லி இருக்க கூடாது.

பாஜக - பாம
குறை சொல்வதானால் எல்லா கட்சிகளையும்தான் சொல்ல வேண்டும்.. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது-. ரஜினிக்கு முதல் குறி அதிமுக - திமுக மட்டும்தான்.. அதை தகர்த்தால்தான் தனது அரசியல் வாழ்க்கை என்று அவருக்குப் புரிந்து விட்டது. அதனால்தான் புரட்சி என்கிறார்.. அலை என்கிறார்.. மாற்றம் என்கிறார்!
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications