சபாஷ்.. பாஜகவுக்கு ஒரு செம சப்போர்ட்டர் கிடைத்து விட்டார்.. ரஜினியை முழுசா பயன்படுத்தலாம்!
Recommended Video
சென்னை: சென்னை போயஸ் தோட்டத்தில் சாலையில் நின்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசுகையில் பாஜக கூட மக்களிடம் எளிதாக தங்களது கருத்தை பரப்ப முடியாத நிலையில் அதை அவர் கனகச்சிதமாக செய்துள்ளார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து போராட்டங்கள் சூடு பிடித்து வருகிறது. இந்தச் சட்டத்தை எதிர்த்து மக்கள், மாணவர்கள், எதிர்க்கட்சிகள் என போராடி வருகின்றனர். இந்த சட்டத்தால் இந்தியாவில் வாழும் முஸ்லீம்களுக்கோ வேறு குடிமக்களுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படாது என மத்திய அமைச்சர் அமித்ஷாவும், பிரதமர் மோடியும் தெளிவுப்படுத்தினர்.
ஆனால் அதை யாரும் ஏற்பதாக இல்லை. ரஜினி எப்போது அரசியலுக்கு வருகிறேன் என சொன்னாரோ அன்றிலிருந்து தமிழக அரசு திட்டங்களாக இருந்தாலும் சரி மத்திய அரசின் சட்ட திட்டங்களாக இருந்தாலும் சரி அதில் ரஜினியின் கருத்து என்ன என்பதை கேட்க அனைவருக்குமே ஆவல் அதிகம்தான்.

சிஏஏ
அந்த வகையில் ரஜினி வாய்திறக்கவில்லையே என இருந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி கொடுத்தார். அவர் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு பிரச்சினை இல்லை என தெளிவாக கூறிவிட்டார்கள். என்பிஆர் அவசியம்தான். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும்.

என்ஆர்சி
சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்புகிறார்கள். அரசியல் கட்சிகள் சுயலாபத்திற்காக தூண்டி விடுகிறார்கள்; குறிப்பாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கும்போது தீர ஆராய்ந்து இறங்குங்கள் என்றார். அது போல் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும் என்றும் ரஜினி காந்த் தெரிவித்தார்.

உணர்த்திய ரஜினி
எப்போதும் சற்று மழுப்பலான பதில்களை கொடுத்து வரும் ரஜினி காந்த் இந்த முறை மிகவும் தெளிவாக பேசியுள்ளார். அதாவது பாஜக ஆதரவாளர் போல் பேசியுள்ளார். தமிழகத்தில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என பாஜக கங்கணம் கட்டியுள்ளனர். இந்த நிலையில் தங்களது நிலைப்பாட்டை ரஜினியை விட யாராலும் தெளிவாக சொல்ல முடியாது என்பதை அவரே உணர்த்திவிட்டார். இனி ரஜினியை பாஜக இது போன்ற விஷயத்துக்கு பயன்படுத்தலாம்.

திட்டங்கள்
சுருக்கமாக சொல்ல போனால், பாஜகவுக்கு நல்ல ஒரு ஆதரவாளர் கிடைத்து விட்டார் என்று சொல்லலாம். பாஜகவால் கூட தங்கள் கருத்தை இத்தனை எளிதாக பரப்ப முடியாது. அந்த வேலையை ரஜினி காந்த் சுலபமாக்கிவிட்டார். முஸ்லீம்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நானே வந்து குரல் கொடுப்பேன் என கூறியுள்ள ரஜினி இதுவரை நீட், ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்ட எத்தனை திட்டங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications