அப்படின்னா அப்படித்தானாம்.. பாஜகவிற்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணியை நக்கலடித்த ரஜினிகாந்த்!
இன்று சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் அளித்த பேட்டியின் போது குறிப்பிட்ட ஒரு விஷயம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video

சென்னை: இன்று சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் அளித்த பேட்டியின் போது குறிப்பிட்ட ஒரு விஷயம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். செய்தியாளர்கள் கேட்ட பல விஷயங்களுக்கு பதில் அளித்தார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும் தமிழர்களின் விடுதலை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இதில் கேள்வி கேட்கப்பட்டது. இதில் பாஜக குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன கேள்வி
தற்போது இந்தியா முழுக்க பாஜகவிற்கு எதிராக கட்சிகள் கூட்டணி வைத்து வருகிறார்கள். பாஜகவிற்கு எதிராக தேசிய அளவில் பெரிய கூட்டணி உருவாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. பாஜகவிற்கு எதிராக கட்சிகள் ஒன்று சேர்வதை எப்படி பார்க்கிறீர்கள் என்று ரஜினியிடம் கேள்வி வைக்கப்பட்டது. இந்த கேள்விக்கு ரஜினி அளித்த பதில்தான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பதில் என்ன
இதற்கு பதில் அளித்த ரஜினி ''அவர்கள் எல்லோரும் பாஜகவை ஆபத்தான கட்சி என்று நினைக்கிறார்கள். நிறைய பேர் அப்படி நினைக்கிறார்கள். பலர் அப்படி நினைத்தால், கண்டிப்பாக பாஜக அப்படிப்பட்ட கட்சியாகத்தான் இருக்கும்'' என்று கூறியுள்ளார்.

பெரிய அதிர்ச்சி
பாஜக குறித்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல், பலர் ஆபத்தான கட்சி என்று நினைப்பதால் அப்படிப்பட்ட கட்சியாகத்தான், இருக்கும் என்று, கிண்டலாக பதில் சொல்லியுள்ளார் ரஜினிகாந்த். இதன் மூலம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியை, ரஜினிகாந்த் கிண்டல் செய்துள்ளார்.

இன்னும் இருக்கிறது
அதோடு அவர் ஆதரித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் பல்டியடித்துள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்திய முறை தவறு என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

சேருவாரா?
பாஜகவிற்கு எதிரான கூட்டணி பற்றி பேசியதால், ஒருவேளை அதே பாஜக கூட்டணியில் ரஜினியும் சேருவாரா என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணியில் ரஜினியும் இடம்பெறுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications