சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூட் கிளியர்.. ரஜினியின் திடீர் முடிவு.. சீமானும், கமலும் இணைய நூறு சதம் வாய்ப்பு.. தொண்டர்கள் குஷி

கமலும் சீமானும் இணைய வாய்ப்புகள் அதிகம் என்றே தெரிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: இப்போது ரூட் கிளியர் ஆகிவிட்டது.. சீமானும், கமல்ஹாசனும் இணைந்து தேர்தலை சந்திப்பதற்கான சாத்திய சூழல் உருவாகி உள்ளது.

தமிழக அரசியலில் கமல் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்பதை முன்வைத்தே அடுத்தக்கட்ட அரசியல் நகரும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு சீமானும், கமலும், இணைவதாக ஒரு பேச்சு எழுந்தது.

பிறகு இவர்கள் 2 பேரின் கூட்டணியுடன் ஓவைசியும் இணைவதாக சொல்லப்பட்டது.. அதற்கான மறைமுக பேச்சுவார்த்தையும் நடந்ததாகவும் செய்திகள் கசிந்தன..

செம ரிசல்ட்.. சீமான் அடிக்கடி சொல்வாரே, அதேதான்.. நல்லகண்ணுவுக்கு திரண்டு வந்து ஓட்டுபோட்ட வாசகர்கள்செம ரிசல்ட்.. சீமான் அடிக்கடி சொல்வாரே, அதேதான்.. நல்லகண்ணுவுக்கு திரண்டு வந்து ஓட்டுபோட்ட வாசகர்கள்

ஓவைசி

ஓவைசி

காரணம், மக்கள் இருக்கும் மனநிலையில், திமுகவின் வாக்குகளை பிரிப்பவர்களாக ரஜினி, கமல், சீமான், ஓவைசியும்தான் பார்க்கப்படுகிறார்கள்.. சீமான் கமலுடன் இணைந்தால் நன்றாக இருக்கும் என்றும், இருவருக்குமே ஒரே வேவ் லென்த் ஒத்துபோகும் என்றும் அரசியல் நோக்கர்களும் கருதினர்.

 சீனியர்

சீனியர்

அதனால்தான், சீனியர் , ஜூனியர் என்று இத்தனை நாளும் பேசி கொண்டிருந்த சீமானும், தன் பிடிவாதத்தை விட்டு, இறங்கி வந்து கமலுடன் இணைய முடிவு செய்தார்.. இந்த சமயத்தில்தான் கமல், ரஜினியை விடாமல் அழைத்து கொண்டிருந்தார்..பகிரங்கமாக தொடர்ந்து ரஜினியை அழைக்கவும் சீமான் தரப்பு கடுப்பாகிவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

 அழைப்பு

அழைப்பு

ஒருபக்கம் தங்களையும் அழைக்கிறார், மறுபக்கம் ரஜினியையும் அழைக்கிறாரே என்று அதிருப்தி அடைந்ததாகவும். அந்த கடுப்பில்தான், கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில், ரஜினியுடன் சேர்த்து கமலையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சீமான் விமர்சித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இப்போது மொத்த மேட்டரும் கிளியர் ஆகிவிட்டது.. ரஜினி பின்வாங்கி விட்டார்.

 அன்பு கட்டளை

அன்பு கட்டளை

அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் சொல்லிவிட்டார்.. இமயமலையில் போய் ரெஸ்ட் எடுங்கள் என்று ஏற்கனவே இதைதான் சீமான் ரஜினிக்கு அன்பு கட்டளையாக தெரிவித்திருந்தார் என்றாலும், இன்று இது ஓபன் அறிக்கையாக வெளிவந்துவிட்டது... மேலும் கமல் - சீமான் இணைவதில் இனி எந்த தடையும் இருக்காது என்றும் தெரிகிறது.. அத்துடன், தமிழக அரசியல் களத்தில் ரஜினி இல்லாத நிலையில், கமலின் இமேஜூம் கூடிவருகிறது.

English summary
Rajinikanth decision, Kamalhasan and seeman will join in future
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X