1962ல் அண்ணா தோற்றார்; கருணாநிதி வென்றார்.. ஏன் தெரியுமா? ரஜினிகாந்த் சொன்ன காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1962 தேர்தலில் சிறப்பாக பேச்சாளரான அண்ணா தோற்றார், கருணாநிதி வென்றார். அதற்கு காரணம் பராசக்தி, மனோகரா, மந்திரிகுமாரி உள்ளிட்ட படங்கள் ஏற்படுத்திய தாக்கம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், எம்பியுமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் லட்சம் பிரதிகள் கடந்ததன் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், நடிகை ரோகித், கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், பொன்னியின் செல்வனை விட வேள்பாரி நாவல் அதிகமாக விற்பனையாகி இருக்கிறது.

Rajinikanth Velpari

கடந்த முறை ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய போது சர்ச்சையானது. துரைமுருகன் உள்ளிட்டோர் பற்றி பேசிய போது, ஓல்டு ஸ்டூடண்டை சமாளிப்பது கஷ்டம் என்று பேசி மாட்டிக்கிட்டேன். எல்லோரும் சிரித்த போது, அனுபவம் உள்ளவர்கள் தான் இயக்கத்தின் மிகப்பெரிய தூண்கள் என்று கடைசியாக சொல்ல மறந்துவிட்டேன். அதனால் கவனமாக பேச வேண்டும் என்று நினைத்தேன்.

இங்கே இருக்கும் உதயச்சந்திரன் மிகப்பெரிய எழுத்தாளர். கோபிநாத் பற்றி சொல்லவே வேண்டாம்.. ரோகித் மிகப்பெரிய சிந்தனையாளர், திறமையாளர்.. ஷங்கர் ஏராளமான படங்களை எடுத்துள்ளார். நடிகர்களை கூப்பிட வேண்டுமென்றால் சிவக்குமாரை அழைத்திருக்கலாம்.. இல்லையென்றால் கமல்ஹாசனை அழைத்திருக்கலாம்.

அதனை விட்டுவிட்டு கூலிங் கிளாஸ் போட்டு ஸ்லோ மோஷனில் நடந்து வரும் ரஜினியை ஏன் கூப்பிட்டுள்ளார்கள் என்று யோசித்தேன். வேள்பாரி நாவலை நான் முழுமையாக படிக்கவில்லை.. 25% வரை மட்டுமே படித்திருக்கிறேன்.. ராஜேஷ் குமார், ஜெயக்காந்தன் போன்ற எழுத்தாளர்களை மிகவும் பிடிக்கும். "யாருக்காக அழுதான்" என்ற புத்தகத்தை படித்த பின் 3 நிமிடம் அழுதேன்.

வரலாற்று புத்தகங்கள் எப்போதும் பிடிக்கும். வேள்பாரியை படிக்க படிக்க முருகன், வள்ளி என்று ஆர்வமாகிவிட்டது. இயற்கையோடு மனிதர்களின் வாழ்க்கையை வர்ணிக்கும் போது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் ஓய்வு காலத்தில் நிச்சயம் வேள்பாரி நாவலை முழுமையாக படித்து முடிக்க எடுத்து வைத்துள்ளேன். சு.வெங்கடேசனை முதல்முறையாக சந்திக்கும் போது, அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்களே, அப்படிதான் இருந்தார்.

பாரி வாரி வாரி கொடுத்தார் என்பார்கள்.. நீங்கள் பாரிக்கு கொடுத்ததால், எம்பி-யாக்கி இருக்கிறார்கள். 1962 சட்டமன்றத் தேர்தலில் சிறந்த பேச்சாளரான அண்ணா தோற்றார்.. ஆனால் கருணாநிதி வென்றார்.. காரணம் பராசக்தி, மனோகரா, மந்திரிகுமாரி போன்ற படங்கள் ஏற்படுத்திய தாக்கம் தான். தமிழ் மக்கள் கலை எந்த வகையில் இருந்தாலும், அதனை ரசிப்பதில் மன்னர்கள். தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். சு.வெங்கடேசனின் பணி அரசியலிலும், இலக்கியத்திலும் தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+