வா.. தலைவா.. வா ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னையில் ரசிகர்கள் போராட்டம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் (ரஜினி) அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னையில் அவரது ரசிகர்கள் போராட்டம் நடத்தினர்.
Recommended Video

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்திருந்தார். இது தொடர்பாக டிசம்பர் 31-ல் அறிவிக்கப்படும் எனவும் ரஜினி கூறியிருந்தார்.

ரஜினி அறிக்கை
ஆனால் கொரோனா பரவல் மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு தம்மால் அரசியலுக்கு வர இயலாது; அரசியல் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் திடீரென அறிவித்தார். இதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இது ரஜினி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

சென்னை போராட்டம்
இதன்பின்னர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காக பல நூதன போராட்டங்களை ரசிகர்கள் நடத்தினர். இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் திரண்டு இன்று காலை முதல் போராட்டம் நடத்தினர்.

நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஏற்கனவே சென்னை போலீசார் 36 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளனர்.

ரஜினியை அழைக்கும் முழக்கங்கள்
இந்த போராட்டத்தின் போது வா தலைவா வா.. இப்போது இல்லைன்னா எப்போதும் இல்லை.. உங்கள் ஆட்சி வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்களை ரஜினி ரசிகர்கள் எழுப்பினர். ரஜினிகாந்தை அரசியலுக்கு வர வலியுறுத்தும் பதாகைகளையும் ரசிகர்கள் அங்கு வைத்திருந்தனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications