எனக்கு பிடிச்சவங்க எல்லாம் போயிட்டாங்க! ஒரு அனாதை மாதிரியான ஃபீல் வருது! ரஜினிகாந்த் உருக்கம்
சென்னை: நாம் யாரை விரும்புகிறோமோ யாரை மதிக்கிறோமோ, அவர்களை எல்லாம் காலம் சீக்கிரமாக கூட்டிக்கொண்டு போகும் போது, ஒரு அனாதை மாதிரியான ஃபீல் வந்து விடுகிறது என உருக்கமாக பேசியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் பட திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஏவிஎம் சரவணன் உருவப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்," 1975 இல் முதல் முறையாக கமலஹாசன் ஏவிஎம் சரவணன் எனக்கு அடையாளம் காட்டினார்.

ஏவிஎம் சரவணன்
ஒரு வெள்ளை உடையுடன் கைகளை கட்டி நடந்து சென்று கொண்டிருந்தார் சரவணன். அதற்கு பிறகு பல சந்தர்ப்பங்களில் அவரை தூரத்தில் இருந்தே பார்த்தேன். பின்பு முரட்டுக்காளை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் மட்டும் 11 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் ஒன்பது படங்கள் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் நடித்தது. சினிமா மட்டுமல்லாது தனிப்பட்ட முறையில் எனக்கு ஆலோசனை வழங்கியவர் சரவணன்.
ரஜினிகாந்த் உருக்கம்
அவரது அலுவலகமே மிகவும் சுத்தமாக இருக்கும் ஒரு பாசிட்டிவ் வைப்ரேட், எனர்ஜி கிடைக்கும். ஏவிஎம் நிறுவனத்தின் படத்தில் நடிக்கிறோம் என்றாலே நாம் எதுவும் செய்யத் தேவையில்லை. ஏவிஎம் சரவணன் அனைத்தையும் செய்து முடித்து வைத்திருப்பார். கதை தொடங்கி ஆர்டிஸ்ட் வரை அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பார். படம் எடுக்கும் போதே அதை பல கோணங்களில் யோசிப்பவர்.
முக ஸ்டாலின்
இந்த விழாவுக்கு முதல்வரும் வந்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் விலை மதிக்க முடியாதது.. அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த விழாவிற்கு வந்துள்ளார்.. மரியாதைக்குரிய முதலமைச்சர் அன்பும், பண்பும், உயர்ந்த உள்ளமும் கொண்டவர் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு. அரசியல்வாதிகளுக்கு எதிராக எடுத்த சிவாஜி படத்தை கலைஞர் சார் பார்த்தது மட்டுமில்லாமல், வெற்றிவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கேடயம் வழங்கினார்.
கமல்ஹாசன் ரஜினி
நான் ராகவேந்திரா திருமண கட்ட ஆலோசனை வழங்கியவரும் ஏவிஎம் சரவணன் தான். வயதாக ஏதாவது ஒரு வகையில் நம்மை பிசியாக வைத்துக் கொள்ள வேண்டும் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மூன்று வருடத்திற்கு ஒருமுறை என படம் நடிக்காமல் வருடம் துக்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என சொன்னார். அதனால்தான் முடிந்தவரை நான் பிஸியாக இருக்க முயற்சி செய்கிறேன். நாம் யாரை விரும்புகிறோமோ யாரை மதிக்கிறோமோ? அவர்களை எல்லாம் காலம் சீக்கிரமாக கூட்டிக்கொண்டு போகும்போது, ஒரு அனாதை மாதிரியான ஃபீல் வந்து விடுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications