மாற்றுக் கட்சியினருடன் தொடர்பு.. 22 மாவட்டச் செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ரஜினி முடிவு
சென்னை: மாற்றுக் கட்சியினருடன் தொடர்பு வைத்திருப்பதாக ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 22 மாவட்டச் செயலாளர்கள் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார் ரஜினிகாந்த். அது குறித்த அறிவிப்பு வரும் டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தியும் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
பல மாவட்டச் செயலாளர்கள் மாற்றுக் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுகுறித்து விளக்கம் கேட்க ரஜினி அறிவுறுத்தியதாக தெரிகிறது. மேலும் அவர்கள் கூறும் விளக்கம் திருப்தியாக இல்லாவிடில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் ரஜினி தெரிவித்ததாக தெரிகிறது.
மேற்கண்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டு வரும் டிசம்பர் 31-ஆம்தேதி புதிய நிர்வாகிகள் பெயரை ரஜினி அறிவிப்பார் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications