Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போற ரூட்டு கரெக்ட்டா? பஞ்ச் டயலாக்குடன் யாருக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்கிறார் ரஜினிகாந்த்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை கூறினார். போயஸ் தோட்டம் முன்பு அதிகாலை முதல் கூடிய ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர்கள் தலைவா தலைவா என அழைத்து ஆரவாரம் செய்தனர்.

2025 ஆம் ஆண்டு முடிந்து தற்போது 2026-ஆம் ஆண்டு தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது ரஜினிகாந்தை சந்திக்க ரசிகர்கள் போயஸ் கார்டனுக்கு செல்வது வழக்கம்.

new year 2026 rajinikanth 2026

அப்போது ரஜினி ஊரில் இருந்தால் அவர்களை சந்திப்பார். இல்லாவிட்டால் லதா ரஜினிகாந்த் வந்து சந்தித்துவிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துகளை கூறி, அவர்கள் வந்த விஷயத்தை ரஜினியிடம் கூறுவதாக தெரிவிப்பார்.

அந்த வகையில் இன்று அதிகாலை முதலே போயஸ் தோட்ட இல்லம் முன்பு ரசிகர்கள் திரண்டனர். இதையடுத்து தகவலறிந்த ரஜினிகாந்த் வெள்ளை நிற வேட்டியில் வெளியே வந்து ரசிகர்களுக்கு கையசைத்தார்.

ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் தலைவா தலைவா என்றும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறியும் ஆரவாரம் செய்தனர். இதையடுத்து ரஜினிகாந்தும் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் ரசிகர்களின் அன்புக்கு நன்றி என தெரிவித்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார். இதையடுத்து அங்கிருந்து ரசிகர்கள் கலைந்து சென்றனர்.

new year 2026 rajinikanth 2026

கடந்த தீபாவளி பண்டிகைக்கும் ரசிகர்கள் வந்த போது வெளியே வந்த ரஜினி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த நிலையில் அவரது எக்ஸ்வலைதள பதிவில் முத்து படத்தின் ஒரு டயலாக்கை வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

அதில்,மீனாவிடம் ரஜினி சொல்வது போன்ற டயலாக் அது. மீனா, "போற ரூட்டு கரெக்ட்டுதானே!" என கேட்பார். அதற்கு ரஜினி, "யாருக்கு தெரியும்? நான் எப்பவுமே போற ரூட்டை பற்றி கவலைப்படுறதே கிடையாது. ஆண்டவன் மேல பாரத்தை போட்டுவிட்டு வண்டி எந்த ரூட்டில் போகிறதோ, அந்த ரூட்டில் "சிவா" என சொல்லிவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்! அந்த வீடியோவில் புத்தாண்டு வாழ்த்துகளையும், கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்ற வாசகத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

வழக்கமாக புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றுதான் ரஜினி பதிவிடுவார். ஆனால் இந்த ஆண்டு புதிதாக போற ரூட்டு கரெக்ட்டா என்பதை யோசிக்கும் வகையில் ஒரு வீடியோ போட்டுள்ளதால் அவர் இதை யாருக்கு பூடகமாக தெரிவிக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

போற ரூட்டு கரெக்ட்டானு பார்க்காதீங்க, கடவுள் மேல பாரத்த போட்டுவிட்டு போங்கள் என ரஜினி சொல்லாமல் சொல்கிறார். இது யாருக்கு பொருந்துமோ தெரியவில்லை! யாராக இருந்தாலும் தான் எடுக்கும் முடிவை ஆண்டவனிடம் விட்டுவிட வேண்டும் என்பதுதான் சாராம்சம்!

இந்த ஆண்டு இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில் ரஜினி கொடுத்திருக்கும் இந்த அறிவுரையை அரசியல் கட்சிகள் ஏற்று நடக்கும் என நம்புவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அவர் வீடியோ போட்ட சில மணிகளில் அவரது ட்வீட் வைரலாகி வருகிறது. அதற்கான லைக்ஸ்கள் அள்ளுகின்றன. ரஜினி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வருவதாக கூறியிருந்த நிலையில் அவரது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என கூறிவிட்டார். ஒரு வேளை ரஜினியும் தற்போதைய அரசியல் களத்தில் இருந்திருந்தால் நீங்கள் அவருக்கு வாக்களித்திருப்பீர்களா என்பதை கமென்ட்டில் சொல்லவும். மேலும் ரஜினி வருகை விஜய்யின் தவெக கட்சியை எந்த அளவுக்கு பாதித்திருக்கும் என்பதையும் சொல்லுங்க!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+