வயதில் சின்னவர் நெல்சன் வரும்போதே எழுந்து நிற்பார் ரஜினி.. சீமான் அடுத்து சொன்னதுதான் ஆச்சர்யம்
சென்னை: வயதில் சின்னவர் நெல்சன் வரும் போது எழுந்து நிற்கும் பழக்கம் ரஜினியிடம் உள்ளது. அதை பாராட்ட மனமில்லாத நீங்கள் அவரை விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள் என்று சீமான் விமர்சித்துள்ளார்.
இதனிடையே திடீரென ரஜினிக்கு ஆதரவாக சீமான் குரல் கொடுக்க என்ன காரணமாக இருக்கும் என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான இன்று(திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அப்பர் அடிகளார், திருஞானசம்பந்தர் பார்வதி தேவியிடம் ஞானபால் குடித்தவர் என்று குனிந்து வணங்கினார். இதெல்லாம் ஒரு இதா? ரஜினிக்கு விருப்பம் என்னவோ அதுதான்..
நானேஇருக்கேன். ரொம்ப பெரிய அறிவாளி, நல்ல பேசுறவன், கெட்டிக்காரனை பார்க்கும் போது எனக்கும் பொறாமை வரும். எனக்கும் வணங்க வேண்டும் என்று தோன்றும். யோகி ஆதித்யாநாத் காலில் விழுந்தது ரஜியின் சொந்த விருப்பம், அவருக்கு அதில் விருப்பம், அவரை தொல்லை செய்யாதீர்கள்., எப்படி பார்த்தாலும் தமிழ்நாட்டின் பெருமை ரஜினிகாந்த். வயதில் சிறியவர்கள் அறிவாளியாக இருந்தாலும் காலில் விழுந்தால் அதை ஏற்க வேண்டும்.
இதனால் ஒரு மனிதன் குற்றவாளி ஆகிவிடுவானா.. ரஜினிகாலில் விழுந்தததால் தான் வெங்காய நிலை ஏறியதா தம்பி? அவருக்கு விருப்பமானதை செய்யவிடுங்க.. அவரை சுதந்திரமாக வாழவிடுங்க.. அவருக்கு பிடிச்சிருக்கு இமயமலைக்கு போறாரு.. வணங்குறாரு.. தியானம் பண்றாரு.. அவருக்கு அந்த பாதை பிடிச்சிருக்கு ..அதுல ஒரு அமைதி கிடைக்குதுன்னு நினைக்கிறாரு..
வயதில் சின்னவர் நெல்சன் வரும்போது எழும்பி நிற்கும் பழக்கம் ரஜினியிடம் உள்ளது. அதை பாராட்ட மனமில்லாத நீங்கள் அவரை விமர்சிக்க தகுதியிள்ளாதவர்கள்...
— Spicy Chilli (@spicychilli4u) August 28, 2023
- திடிரென தலைவர் ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமான்...
என்ன விஷயமா இருக்கும் ..??#Jailer #Rajinikanth pic.twitter.com/eKH1rRashf
எனக்கு புத்தகங்கள் படிப்பதில் அமைதி கிடைக்கிறது.இசையை ரசிப்பதில் எனக்கு ஒரு அமைதி கிடைக்கிறது. அவருக்கு அதில் விருப்பம் இருக்கிறது.எனவே ரஜினியை தொல்லை பண்ண வேண்டாம்.
ஒரு நடிகன் 73 வயதில் 150 கோடி சம்பளம் வாங்கி, இவ்வளவு பெரிய வியாபாரத்தை கொடுக்கும் நடிகர் தமிழ்நாட்டில் இருப்பது நமக்கு பெருமை தானே.. அதை தான் நீங்கள் பார்க்க வேண்டும். ரஜினிக்கும் யோகிக்கும் முதலில் இருந்தே நட்பு இருந்திருக்கலாம். ரஜினிக்கு நட்பு வைத்துக்கொள்ள பலரும் விரும்புவார்கள்.
நீங்கள் இதை பேசுறீங்ளே.. நெல்சன் என்கிற என் தம்பி இயக்குனராக இருக்கிறார். ஜெயிலர் டைரக்டர். இவரு என்ன வயசு.. ரஜினி என்ன வயசு.. ஆனால் நெல்சன் வரும்போது, டைரக்டர் வந்துட்டாரு,டைரக்டர் வந்துட்டாருன்னு சொல்லி எழுந்து நிற்பாரு ரஜினி.. அதை பற்றி நீங்கள் ஏன் பேசவில்லை.. அது மனித மாண்புங்க..
ஒரு இயக்குனர் வெற்றி கொடுத்திருக்கிறாரோ, இல்லையோ, யாரோ ஒருவர்.. ஆனால் இயக்குனரை மதிக்க வேண்டும் என்று மதிப்பு கொடுத்துள்ளார் ரஜினி. அதை நீங்கள் பாராட்டலாமே.. ஒரு தலைமுறைக்கு பாடத்தை கற்பிக்கிறார் அல்லவா? அதை தானே நீங்கள் பார்க்க வேண்டும்.. யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததை பற்றி இவ்வளவு பேசும் நீங்கள்..நெல்சன் வரும் போது எழுந்து நிற்பது குறித்து யாருமே பேசவில்லையே.. ஏன்? இவ்வாறு சீமான் செய்தியாளர்களிடம் பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications