ரஜினி முன்பை விட வேகமாக இருப்பார்..அவர் உடலில் என்ன பிரச்சினை...சிகிச்சை குறித்து மருத்துவர் பேட்டி
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் விரைவில் படப்பிடிப்பில் பங்கேற்கலாம் என்றும் மருத்துவர் அம்லோற்பவநாதன் கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதால் அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அறுவைச் சிகிச்சை நிபுணர் அம்லோற்பவநாதன் கூறியுள்ளார். முன்னை விட அவர் வேகமாக செயல்படுவார் என்றும் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்றும் டாக்டர் அமலோற்பவநாதன் கூறியுள்ளார்.
ரஜினி ரசிகர்கள் அண்ணாத்த படத்தைக்காண ஆவலோடு காத்திருக்கின்றனர். தீபாவளியை ரஜினி ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாட காத்திருக்கும் நிலையில் உடல் நல பாதிப்பால் ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ரஜினிகாந்த்.
ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்துக்கு இரவு முழுவதும் தீவிர சிகிச்சைப் பிரிவான ஐ.சி.யூவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது உறவினர் ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.ஜி மகேந்திரன், ரஜினியின் உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளது என்று கூறினார்.

உடல் நலக்கோளாறு
இதனிடையே ரஜினிகாந்தின் மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க அவருக்கு மறுசுழற்சி சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது ரஜினிகாந்த் உடல்நிலை தேறி வருகிறது. அடுத்த சில நாட்களில் ரஜினிகாந்த் முழுமையான குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என நேற்றைய தினம் அறிக்கை வெளியானது.

என்ன பாதிப்பு
இந்த நிலையில் ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து அறுவை சிகிச்சை நிபுணர் அம்லோற்பவநாதன் விளக்கம் அளித்துள்ளார். நமது உடல் நிலையில் ஏற்படும் பாதிப்புகளை அறிகுறிகள் காட்டிக்கொடுத்து விடும். FAST என்று சொல்வார்கள். நமது முகம் கோணிக்கொள்ளும், எச்சில் ஒழுக ஆரம்பிக்கும், ஒரு கை பலவீனமாகி விடும். எதையும் பிடிக்க முடியாமல் போய் விடும். எழுந்து நிற்க முடியாது மயக்கம் வரும் தடுமாறும், பேச்சில் குளறல் ஏற்படும் தனது பெயரை கூட ஒழுங்காக சொல்ல முடியாது. கண் பார்வையில் பாதிப்பு ஏற்படும் மறையும். இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம். ஸ்கேன் எடுத்து சிகிச்சை செய்ய வேண்டும்.
Recommended Video

ரஜினிக்கு என்ன நடந்திருக்கும்
ரஜினிகாந்துக்கு இப்படி அறிகுறி தென்பட்டிருக்கலாம். இதுபோன்ற அறிகுறி தென்பட்டதால்தான் ரஜினிகாந்திற்கு உடனே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி உடனே மருத்துவமனைக்கு சென்றதால்தான் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு சரி செய்யப்பட்டது என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

குணமடைந்து விட்டார்
ரஜினிகாந்த் உடல் நலம் சிறப்படைந்து முன்பை விட வேகமாக செயல்படுவார் படப்பிடிப்பில் பங்கேற்கலாம் என்றும் மருத்துவர் அமலோற்பவநாதன் கூறியுள்ளார். ரஜினிகாந்த் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்றும் மருத்துவர் அமலோற்பவநாதன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications