அரசியலில் நான் தான் சூப்பர் ஸ்டார்.. சினிமாவில் ரஜினி.. 2 ஸ்டாரும் சேர்ந்ததால் பயந்துட்டாங்க: சீமான்
சென்னை: ரஜினியை நான் ஒரே ஒரு முறை தான் சந்தித்து பேசினேன். அதற்குள் எல்லாரும் ஐயோ.. ஐயோ என்கிறார்கள். நாங்க இரண்டு பேரும் பேசினதால் சங்கி ஆகிவிட்டோம் என்றால், அவரை வைத்து படம் எடுத்த உங்களுக்கு என்ன பேரு.. நான் ஒரு அரசியல் சூப்பர் ஸ்டார்.. ரஜினி ஒரு திரையுலக சூப்பர் ஸ்டார், 2 ஸ்டாரும் சேர்ந்ததால் பயந்துட்டாங்க என்று சீமான் பேசினார்.
மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றும் நான் அரசியலில் சூப்பர் ஸ்டார் என்றும் இரண்டு ஸ்டார்களும் இணைந்ததால் பலரும் பயந்து விட்டார்கள் என பேசினார்.

மதுராந்தகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது:- இத்தனை கொடி இருக்கும் போது தலைவன் எதற்காக புலி கொடியை தூக்கினான் தெரியுமா.. தமிழன் பரம்பரை கொடியை பாரடா.. பாண்டியனின் கொடியை பார்.. மீன் அப்படியே துள்ளிக்கொண்டிருக்கும். சோழரின் கொடியை பார்.. புலி பாய்ச்சலில் இருக்கும். சேரனின் கொடியைப் பார்.. வில்லிலிருந்து அம்பு பாய்ந்துக்கொண்டிருக்கும்.
மூவேந்தர்களின் கொடியும் பாய்ச்சலில் இருக்கும். ஆனால் மத்தவங்கள மாதிரி, பன்னி, நாய், ஒட்டகம், நரியை தூக்கிட்டு வரல. தடை.. அதை உடை.. ஒருவர் பத்தாகும்.. பத்து நூறாகும். பகைவன் நடுங்கும் படையாகும். படையை பெருக்கு.. தடையை நொறுக்கு.. இனத்தின் விடுதலையே இறுதி இலக்கு. அவன் பற்ற வைத்த நெருப்பு காற்றுக்குள் பற்றி எரிகிறது. விதைத்தவன் உறங்கினாலும், விதை உறங்காது..
இங்கே விதையும் முழித்துக்கொண்டு இருக்கிறது. விதைத்தவனும் முழித்துக்கொண்டு தான் இருக்கிறான். ஒற்றை மகன் 36 லட்சம் பேராக மாறும் போது.. 36 லட்சம் மகன் எத்தனை கோடியாக மாறும் என்பதை எல்லாரும் நினைத்து பார்க்க வேண்டும். என்னையை காவியை போர்த்தி சங்கியாக பார்க்கிறார்கள். எனக்கு எந்த ஆடை போட்டாலும் நல்லா இருக்கும்.
நானுன் என் தலைவனும் பேசினது எங்க இரண்டு பேருக்கு தான் தெரியும். நாங்க என்ன பேசினோம் என்பது எங்களுக்கும், எங்களை சுத்தி நின்ற போராளிக்கும் மட்டும் தான் தெரியும். இப்போது நானும் ரஜினிகாந்தும் இரண்டரை மணி நேரம் பேசினது எனக்கும் அவருக்கும் மட்டும் தான் தெரியும். நாங்க இரண்டு பேரும் பேசினதை வைத்து சங்கி ஆகிவிட்டோம் என்றால், அவரை வைத்து படம் எடுத்த உங்களுக்கு என்ன பேரு..
வருசத்துக்கு 2 படம் எடுத்து பணம் சம்பாதிக்கிற நீங்க யாருடா.. உங்க வீட்ல காது குத்தா. கல்யாணமா.. புத்தகம் வெளியிடனுமா.. பாட்டு வெளியிடனுமா. எல்லாத்துக்கும் கூப்டு வைத்துக்கொள்வீங்க.. நான் ஒரே ஒரு தடவ தான் அவரை சந்தித்து பேசியிருக்கேன். அதுக்குள்ள ஐயோ.. ஐயோ.. என்கிறார்கள். ஏனென்று தெரியுமா?.. அவர் சினிமால சூப்பர் ஸ்டார்.. நான் அரசியலில் சூப்பர் ஸ்டார்.. இரண்டு ஸ்டாரும் சேர்ததால் பயந்துட்டாங்க.. நீங்க என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள்.
எழுது.. எழுது.. லட்சக்கணக்கான யூனிட் ரத்தம் கொடுத்து இருக்கிறேன். பல லட்சம் மரக்கன்றுகள் நட்டு இருக்கேன். பல்லாயிரக்கணக்கான பனை விதைகளை நட்டு இருக்கிறேன். இதை எல்லாம் எழுத மாட்டீங்க. மக்களின் பிரச்சினையை மக்களோடு மக்களா இருந்து போராடி தடுத்திருக்கிறேன்..
நான் இல்லை என்றால் 8 வழிச்சாலை வந்துருக்கும்டா. நான் இல்லைன்னா பரந்தூரில் விமான நிலையம் கட்டிருவான். நான் இல்லையென்றால் காட்டுப்பள்ளியில் துறைமுகம் கட்டியிருவான்.. ஆனால் சரியான ஆண் மகனா நானும் என் படையும் இருக்கும் வரை கட்டிருங்க பார்க்கலாம். வாய்ப்பில்ல ராஜா.. "ப்ரோ.. இட்ஸ் வெரி ராங்.. ப்ரோ.." இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications