ரஜினிகாந்துக்கு ஆஞ்சியோவைவிட அதி நவீன அறுவை சிகிச்சை? அப்பல்லோவில் நடப்பது என்ன?
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு ஆஞ்சியோகிராமை விட அதி நவீன அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு இன்று முக்கிய பரிசோதனைகளும் செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினி நடித்த வேட்டையன் படம் வரும் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் அவர் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு விஐபி வருகிறார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் , மருத்துவக் குழுவினருக்கு அறிவுறுத்தியதை அடுத்து அந்த வளாகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதி, தயார் நிலை உள்ளிட்ட முன்னெச்சரிக்கைகள் தயாராக இருந்தன. ஆனாலும் மருத்துவமனை நிர்வாகத்தில் இருக்கும் உயரதிகாரிகளை தவிர வேறு யாருக்குமே ரஜினிகாந்த் வரபோகிறார் என தெரியவில்லை.
பிறகு இரவு ரஜினிகாந்த் வந்திருந்தார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு வயிற்று பகுதியில் ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மனைவி லதா தெரிவித்துள்ளார்.
மேலும் ரஜினிகாந்த் இன்று அல்லது நாளை வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இன்று அவருக்கு ஆஞ்சியோகிராமைவிட அதிநவீன அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கிறார்கள். இது பொதுவாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவது வழக்கமாம்.
ரஜினிகாந்துக்கு என்ன நடந்தது என தெரியாமல் அவருடயை ரசிகர்கள் பரிதவித்து வருகிறார்கள். அவருக்கு பயப்படும்படி ஒன்றும் இல்லை என லதா கூறினாலும் ரஜினியை பழையபடி பார்க்கும் வரை ரசிகர்களின் மனம் கேட்காது என்பது போல் தெரிகிறது.
இதே போல் கடந்த 2011 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது அவருடைய உடல்நிலை மோசமடைந்துள்ளதால் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது ஒரு மாதத்திற்கு மேல் சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.
அதுபோல் கடந்த 2020ஆம் ஆண்டு அண்ணாத்த படம் ஷூட்டிங்கின் போது ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அங்கிருந்து நேரடியாக ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications