ரஜினி பயந்தாங்கோளி கிடையாது.. ஆதவ் அர்ஜுனா விளக்கம் தரணும்.. தவெக மேடையிலே கிளம்பிய எதிர்ப்பு
சென்னை: ரஜினிகாந்த் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கொளத்தூரில் தவெக பொதுக்கூட்ட மேடையில், ரஜினி பற்றி பேசியது குறித்து விளக்கம் தர வேண்டும் என ஆதவ் அர்ஜுனாவை நோக்கி அசோக் பேசியுள்ளார்.
ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாராக இருந்த அசோக் அண்மையில்தான் தவெகவில் இணைந்தார். இந்த நிலையில் தான் இன்று கொளத்தூர் தொகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் இவ்வாறு பேசினார். அவர் கூறியதாவது:-

இன்று ஒரு விஷயம் பேச வேண்டும் என்று தான் வந்தேன். நான் 13 வயது இருக்கும் போது ரஜினிகாந்தை ரசித்து இன்று 59 வயது ஆகிறது. எனது அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தது ரஜினிதான். எனது நல்லது கெட்டது.. இன்னைக்கு ஒரு மனுஷனா நேர்மையான நபராக இருப்பதற்கு ரஜினிதான் காரணம். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை.
அவருக்கு உடம்பு சரியில்லை.. கொரோனா வந்ததுதான் காரணம். கொரோனா வந்ததால் ..அவருக்கு சின்ன ஆபரேஷனும் நடந்தது. கொரோனா காரணமாக 100 அடி தள்ளிதான் மீட்டிங் போட முடியும் எனும் போது.. கூட்டம் இல்லாமல் போட முடியாது என்னும் போது மருத்துவர் அறிவுறுத்தலால் அவரால் வர முடியாமல் போனது.
எனக்கு சேவை செய்ய வேண்டும். ஒரு நல்ல தலைவர் வேண்டும் என்று காத்துக்கொண்டு இருந்தேன். எனக்கு தெரிந்து எம்.ஜிஆருக்கு பிறகு நல்ல தலைவராக யாரையும் கருதவில்லை. ஆனால் இன்று விஜய், சினிமாவை விட்டுவிட்டு பல கோடி சொத்தை விட்டுவிட்டு வருகிறார் என்றால் பெரிய விஷயம்.
அம்பானி மாதிரி சொத்து இருப்பவர்கள் கூட 10 ரூபாய் எடுக்க யோசிக்கும் இந்த கால கட்டத்தில்.. பல கோடி சொத்தை விட்டு.. இன்னும் 30 வருஷம் டிரவல் பண்ணுற நபர் வருகிறார் எனும் போது நான் கவனிக்க தொடங்கினேன். 15 நாள் முன்னாடி விஜய்யை பார்க்க சென்று இருந்தேன். ஆதவ் அர்ஜுனாவை எனக்கு 12, 13 வருஷமாக தெரியும்.
பேஸ்கட் பால் வீரராக ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்து ஒன்றுமெ இல்லாமல் வந்தவர். ஒரு ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்தவர். ரஜினி மன்றம் சார்பாக நலத்திட்டங்கள் செய்யும் போது நிறைய பணம் கொடுத்து ஏழைகளுக்கு நல்லது செய்யுங்க என்று ரஜினி மன்றம் சார்பாக கூட இருந்து செய்தவர்தான் ஆதவ் அர்ஜுனா. அப்படி செய்த நபர் எங்களை பெருமையாக பேசியவர் இப்போது ஒரு போரட்டத்தில் பேசியதாக பெரும் சர்ச்சைகள் வந்து இருக்கு..
நான் அதே அப்போது அங்குதான் இருந்தேன். அவர் சர்ச்சையாக பேசியிருந்தால் அதே மேடையில் ஏறி ஏன் இப்படி பேசுனீங்க எனக்கு புரிய வையுங்க என்று கேட்டு இருப்பேன். ஆனால் அவர் நோக்கத்துடன் பேசவில்லை.. 45 வருஷமாக ரஜினி கூட இருந்தவன். எப்படி விட்டுக்கொடுப்பேன்.நான் எப்படி உணர்வு இல்லாமல் இருக்குமா? ஆதவ் அர்ஜுனா உள்நோக்கத்துடன் பேசவில்லை என்பதை புரிந்து கொண்டேன்.
அன்று நடந்தது போராட்டம் பற்றி.. திமுகவை விமர்சிக்கும் போது வார்த்தை தவறி வரலாம். அப்படி வந்ததாதான் நான் கருதுகிறேன். இண்டென்ஷனாக பேசவில்லை. ரஜினிகாந்த் அற்புதமான மனிதர். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. யார் சொன்னலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவர் பயந்தாங்கொள்ளி கிடையாது. போராட்ட குணம் கொண்டவர். நிறைய பேரை எதிர்த்து குரல் கொடுத்தவர்.
அவரை போல தைரியசாலியை பார்க்கவே முடியாது. அதனால், 45 வருடம் பழகியதால் சொல்கிரேன். ஆதவ் அர்ஜுனாவிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான். நான் கூட இருந்தேன். உங்களுக்கு இண்டென்ஷன் இல்லை என்று தெரியும். ஆனால் பப்ளிக்கா நீங்க எந்த எண்ணத்தில் பேசுனீங்க என்று நான் தெரிஞ்சுக்க ஆசைப்படுகிறேன். ரசிகராக இத்தனை வருஷம் பழகியிருக்கிறேன்.
ரஜினி சார் பற்றி யாராக பேசினால் உங்க சார்பாக நான் கேள்வி கேட்பேன். உங்க சார்பாக ஏன் பேசுனீங்க என்று புரிய வையுங்க என்று கேட்பேன். எனவே உலகத்தில் உள்ள எல்லா ரஜினி ரசிகர்களிடம் நான் சொல்கிறேன்.உங்க சார்பாக நான் தவெகவில் இருக்கிறேன். இதை புரிந்து கொண்டு..மேற்கொண்டு எதுவும் இல்லாமல் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.. நான் விடமாட்டேன்" என்று பேசினார்.
-
எகிறி அடிக்க ரெடியாகும் வில்லிவாக்கம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆப்பு! திமுக இறக்கிய முக்கிய ஆயுதம்! -
Villivakkam: ஜவ்வாக இழுக்கும் தொகுதி பிரச்சனை! ஆளும் கட்சிக்கு நெருக்கடியா! ஆதவுக்கு பாசிட்டிவ்? -
விஜய் அவரது குழந்தையை கைவிடமாட்டார்.. திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க ஆதவ் அர்ஜுனா ஐடியா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications