10 மேடைகளில் ஸ்டாலின் பேசுவதை.. 10 நிமிஷ பேச்சில் ரஜினி செய்து விடுவார்.. கராத்தே தியாகராஜன் பொளேர்!
ரஜினிதான் அடுத்த முதல்வர் என்கிறார் கராத்தே தியாகராஜன்
சென்னை: "ஸ்டாலின் பத்து மேடைகளில் பேசுவதைவிட.. 10 நிமிடம் பேசும் ரஜினியின் கருத்துதான் ஃபேமஸ் ஆகிறது.. ஜெயலலிதா, கருணாநிதி மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்... 2021 அவர்தான் முதல்வர் ஆவார்.. இஸ்லாமியர்கள் உட்பட எல்லா சமுதாய மக்களின் நம்பிக்கையையும் பெற்று ஆட்சியமைப்பார்" என்று கராத்தே தியாகராஜன் "மீண்டும்" கூறியுள்ளார்.
Recommended Video
கட்சி ஆரம்பிக்க போறேன் என்று ரஜினிகாந்த் சொன்னதைவிட, அவரது நண்பர் கராத்தே தியாகராஜன் சொன்னதுதான் கடந்த காலங்களில் அதிகம்.. ரஜினியுடன் நல்ல நெருக்கத்தில் உள்ளவர்.. பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளக்கூடியவர்.. எத்தனையோ முறை போயஸ் கார்டனுக்கு சென்று தங்களின் நட்பை புதுப்பித்து கொண்டு வருபவர்கள்.
காங்கிரஸ் கட்சியில் கராத்தே தியாகராஜன் உச்சத்தில் இருந்தபோதே, ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பிப்பார் எனறு பலமுறை உறுதியாக சொன்னவர்.. ஆனால் கூட்டணி கட்சிக்குள் இருந்துகொண்டே சில விவகாரங்களை இவர் பேசப்போய், திமுக தலைமையை சூடாக்கியது.. இறுதியில் இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஸ்டாலின்தான்
தாம் நீக்கப்பட்டதற்கு காரணம் ஸ்டாலின் தான் என்று கருதும் கராத்தே தியாகராஜன் தொடர்ந்து அவரை சீண்டும் வகையில் பல விமர்சனங்களையும் செய்து வருகிறார். "ஸ்டாலின் அவர்களே ரஜினியிடம் லெப்ட்ல வைச்சுக்கோங்க, ரைட்ல வச்சுக்கோங்க, நேராக வைத்துக்கொண்டால் அரசியலில் தோற்றுவிடுவீர்கள்" என்று பகிரங்கமாகவே சொன்னவர்... ஸ்டாலினுக்கும், ரஜினிக்கும் ஓட்டப்பந்தயம் வெக்கலாமா? என்று டிவி நிகழ்ச்சி

கட்சி தொடங்குவார்
இப்போது ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக தகவல்கள் ஏராளமாக வந்து கொண்டிருக்கிறது... இதுகுறித்து விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, தன் தரப்பு கருத்தை எடுத்து வைத்துள்ளார் கராத்தே தியாகராஜன். அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்: "நடிகர் ரஜினிகாந்த் இன்னும் ஒரு சில மாதங்களில் கட்சி தொடங்குவார்.. நடிகர் ரஜினிகாந்த் இன்னும் ஒரு சில மாதங்களில் கட்சி தொடங்குவார்.. முக ஸ்டாலின் பத்து மேடைகளில் பேசுவதைவிட 10 நிமிஷம் ரஜினியின் கருத்து ஃபேமஸ் ஆகிறது.. ரஜினியின் ஒவ்வொரு கருத்தும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஜெயலலிதா
ஜெயலலிதா, கருணாநிதி மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார்.. ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகுதான் கூட்டணி குறித்து முடிவு செய்வார்.. வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ரஜினிகாந்த் முதல்வராவார்.. இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து சமுதாய மக்களின் நம்பிக்கையை பெற்று அட்சியமைப்பார்" என்று கராத்தே தியாகராஜன் கூறினார்.

முதல்வர்
அன்று, பதவியிலிருந்து நீக்கப்பட்ட சமயத்தில் கராத்தே தியாகராஜன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "திமுகவுக்கும் ரஜினிகாந்திற்கும் இடையேதான் 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிருக்கும்... இதில் ரஜினிகாந்த் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பார்... இந்த வாய்ப்பு ஸ்டாலினுக்கு நிச்சயம் கிடைக்காது" என்று தெரிவித்திருந்தார். அதிமுகவை கணக்கிலேயே வைத்து கொள்ளவில்லை என்றாலும் அன்று சொன்னதையே இன்றும் சொல்லி ரஜினிதான் அடுத்த முதல்வர் என்று சொல்லி திமுக வயிற்றில் புளியை கரைத்து விட்டுள்ளார் தியாகராஜன்!
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications