தேசிய கட்சிக்கு கல்தா.. ரஜினியோடு இணைய போகும் முக்கிய புள்ளி.. அமெரிக்காவில் பரபர ஆலோசனை!?
சென்னை: தேசிய கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் நடிகர் ரஜினிகாந்த் தொடங்க போகும் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவில் தங்கி உள்ளார். கடந்த வாரம் அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு அமெரிக்கா சென்றார்.
இந்த வாரம் முழுக்க அவர் நியூயார்க்கில் இருப்பார் என்று தெரிகிறது. அவரின் இந்த பயணத்திற்கு பின் சில முக்கிய காரணங்கள் உள்ளதாக தகவல்கள் வருகிறது.

முக்கிய தலைவர்
இந்த அமெரிக்க பயணத்தில் அவர் முக்கிய தேசிய கட்சியின் பிரமுகர் ஒருவரை சந்திக்க உள்ளார். தேசிய கட்சி ஒன்றின் மாநில தலைவராக இருக்கும் பிரமுகரை ரஜினி சந்திக்க இருக்கிறார். இவர்கள் இருவரும் இதற்கு முன்பில் இருந்தே நல்ல நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் அவர்
அந்த தேசிய கட்சியின் தலைவர், தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளியாவார். அவரது கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக அவர் எப்போது வேண்டுமானாலும் கட்சியை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கட்சியில் அவரின் பதவியும் எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்றும் கூறுகிறார்கள்.

பேச போகிறார்கள்
இவர்கள் இருவரும் தற்போது அமெரிக்காவில்தான் இருக்கிறார்கள். அந்த முக்கிய புள்ளியிடம் அரசியல் நடவடிக்கை குறித்து ரஜினி பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இந்த சந்திப்பு முடிந்து தமிழகம் திரும்பும் ரஜினி, தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய பொறுப்பு
அதேபோல் அந்த அரசியல் புள்ளிக்கு ரஜினி தனது கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்க போகிறார் என்றும் கூறுகிறார்கள். பெரும்பாலும் பொதுச்செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications