பரபரப்பான அரசியல் சூழலில்! மு.க.ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! என்ன பேசினார்?
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார். ரஜினி பேசியது என்ன என்பதை பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. இது திமுகவினருக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள்.

இன்று காலை கூட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து பேசினார். அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
"வெற்றி பெறும் நேரத்தில் மட்டுமல்ல, இக்கட்டான சூழலிலும் நான் உங்களுடன் இருப்பேன்" என ஸ்டாலினிடம் ரஜினி கூறியதாக சொல்லப்படுகிறது.
ரஜினிகாந்த் மற்றும் மு.க.ஸ்டாலின் இடையேயான உறவு வெறும் சமகாலத் தலைவர்கள் என்பதையும் தாண்டியது. அதன் சில முக்கியப் பக்கங்களை பார்க்கலாம்.
1. கலைஞர் காலத்து நட்பு: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர் ரஜினிகாந்த். அந்தச் சமயத்திலிருந்தே ஸ்டாலினுடன் அவருக்கு நெருக்கமான நட்பு உண்டு. ரஜினியின் குடும்ப விழாக்களிலும், ஸ்டாலின் வீட்டு சுப நிகழ்ச்சிகளிலும் இருவரும் பரஸ்பரம் கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
2. "இந்திய அரசியலின் நட்சத்திரம்": கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின் பாராட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ஸ்டாலினை "இந்திய அரசியலின் நட்சத்திரம்" என்று புகழ்ந்து தள்ளினார். "ஸ்டாலின் அவர்கள் சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்பவர்" என்று அவர் அன்றே குறிப்பிட்டது, இருவருக்கும் இடையிலான பரஸ்பர மரியாதையைக் காட்டியது.
3. வெளிப்படையான விவாதங்களும் தீர்வுகளும்: சில நேரங்களில் ரஜினியின் கருத்துகள் (உதாரணமாக, துரைமுருகன் குறித்த 'பழைய மாணவர்' கருத்து) திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தினாலும், உடனடியாக ஸ்டாலின் அல்லது மற்ற மூத்த தலைவர்களைத் தொடர்பு கொண்டு ரஜினி அதனைத் தெளிவுபடுத்தத் தவறியதில்லை. கசப்புகளைத் வளரவிடாமல் நட்பைப் பாதுகாப்பதில் இருவரும் உறுதியாக இருந்து வந்துள்ளனர்.
4. அரசியல் மாற்றமும் பக்குவமும்: ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட காலத்திலும், ஸ்டாலின் அவரைத் தனது அரசியல் எதிரியாகப் பார்த்ததில்லை. ரஜினி தனது அரசியல் முடிவைக் கைவிட்டபோது, முதலில் வாழ்த்தியவர்களில் ஒருவராக ஸ்டாலின் இருந்தார்.
இன்று தமிழக அரசியல் களம் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து, விஜய் தலைமையிலான 'தவெக' எழுச்சி பெற்றுள்ள நிலையில், தனது பழைய நண்பருக்குத் தோள் கொடுக்க ரஜினிகாந்த் விரைந்தது, தமிழக அரசியலில் "நட்புக்கு" இன்னும் இடம் உண்டு என்பதை உணர்த்துகிறது. ஸ்டாலினை சந்தித்து தைரியம் சொன்ன ரஜினிகாந்த், தேர்தலில் வென்ற தவெகவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications