பெரியார் வாகனம் மீது செருப்பு வீச்சுக்கு எதிர்வினைதானே ராமர் சிலைக்கு செருப்பு மாலை? தடுமாறிய ரஜினி
Recommended Video
சென்னை: 1971-ல் சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் தந்தை பெரியார் வாகனம் மீது செருப்பு வீசப்பட்டதற்கு எதிர்வினையாகத்தானே ராமர் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டது என்கிற செய்தியாளரின் கிடுக்குப் பிடி கேள்விக்கு பதிலளிக்காமல் ரஜினிகாந்த் தடுமாறினார்.
துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், 1971 சேலத்தில் பெரியார் நடத்திய மாநாட்டில் ராமர் சீதை உருவங்கள் ஆடை இல்லாமல் செருப்புமாலை போடப்பட்டு எடுத்துவரப்பட்டன என பேசியது சர்ச்சையானது. ராமர் சிலை நிர்வாணமாக கொண்டுவரப்படவில்லை; ரஜினிகாந்த் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார் என பெரியார் இயக்கத்தினர் குற்றம்சாட்டினர்.

மேலும் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கவும் பெரியார் இயக்கத்தினர் வலியுறுத்தினர். இதற்கு நேற்று விளக்கம் அளிக்க செய்தியாளர்களை அழைத்த ரஜினிகாந்த், அவுட்லுக் ஏட்டில் இது தொடர்பாக செய்தி வந்துள்ளது. நான் பேசியதில் தவறு இல்லை. மன்னிபு கேட்க முடியாது என்றார்.
இச் சந்திப்பில் ரஜினிகாந்திடம் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியும் ரஜினிகாந்த் தந்த பதிலும்:
கேள்வி: மூடநம்பிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தின நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து செருப்பு வீசினாங்க..அதாவது வரலாற்றை ரஜினி மாத்தி பேசுகிறார் என திராவிடர் விடுதலை கழகத்தால் முன்வைக்கப்படுகிறது
ரஜினிகாந்த்: அதாவது நான் கிளியரா சொல்லிட்டேன்.. இப்போ நீங்களே இதை கிளறுகிறீங்க..
சில சம்பவங்களை மறுபடியும் மறுபடியும் கொண்டுவரக்கூடாது.. இது வந்து மறுக்கக் கூடிய சம்பவம் இல்லை.. ஆனால் மறக்க வேண்டிய சம்பவம்.. ஓகே. தேங்க்யூ
என்று பதிலளித்துவிட்டு வீட்டுக்குள் வேகமாக சென்றுவிட்டார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications