கூலி ரீல்! 75 வயதிலும் ரியல் லைஃப்பில் ரஜினி செய்யும் ஒர்க் அவுட் பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது 75 வயதிலும் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. கூலி திரைப்படத்தில் அன்று கழுகு படத்தில் பார்த்தது போல் ரஜினி அப்படியே இருக்கிறார் என வியந்து வரும் ரசிகர்கள் இந்த வீடியோ பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்து வருகிறார்கள்.

ரஜினிகாந்த் என்றாலே ஸ்டைல்தான். அவர் சிகரெட்டை தூக்கி பிடிக்கும் ஸ்டைல், தலையை கோதி விடும் ஸ்டைல், கைகளை அசைக்கும் ஸ்டைல், சிரிப்பது என ஒவ்வொரு அசைவுகளும் ஸ்டைலாக இருக்கும். கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சத்யராஜ், ரஜினியுடன் நடித்த போது அப்போதெல்லாம் கேரவன்கள் இல்லாததால் அவர் கிடைக்கும் இடத்தில் ஓய்வு எடுப்பார்.

rajinikanth coolie

அவர் அவ்வாறு ஒரு மரத்தடி பெஞ்சில் ஓய்வெடுக்கும் போது கூட ஸ்டைல்லாக இருந்தார். நாமாக இருந்தால் வாயை திறந்து கொண்டு நாக்கை தொங்க வைத்துக் கொண்டு பிறர் பார்த்தால் சிரிப்பு வருவது போல் தூங்குவோம். ஆனால் ரஜினி சார் தூங்கும் போது கூட அலர்ட்டாக ஸ்டைலாக தூங்கினார் என்றார்.

அது போல் ரஜினி ஸ்டைல்தான். நடனமே ஆடத் தெரியாவிட்டாலும் இந்த ஸ்டைலும், அவர் சொல்லும் வாழ்க்கைத் தத்துவமும், அவரது நற்குணமும்தான் அவர திரைத்துறையில் 50 ஆண்டுகளாக நீடிக்க வைத்தது. அதனால்தான் அவர் மட்டுமே இன்று வரை சூப்பர் ஸ்டாராக உள்ளார்.

தற்போது ரஜினி நடிப்பில் 172 ஆவது படமாக கூலி நேற்று வெளியானது. கூலி திரைப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சவுமின், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இநத் படம் குறித்து ரசிகர்கள் கூறும் போது, "ரஜினி கழுகு படத்தில் பார்த்தது போல் இளமையாக இருக்கிறார்.

rajinikanth coolie

ஆரம்பத்தில் அவரது ஓட்டம், இறுதி வரை எந்த சுணக்கமும் இல்லாமல் ஓடிக் கொண்டே இருந்தார். எந்த இடத்திலும் அவரது நடிப்பின் ஆற்றல் குறையவில்லை. 75 வயதில் இப்படி டான்ஸ், ஃபைட் என தலைவர் கலக்குகிறார்.

அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இதே போன்று உற்சாகமான உடல்நலத்துடன் இருக்க வேண்டும். கூலி படம் குறித்து பலர் கலவையான விமர்சனங்களை முன் வைத்தாலும் தலைவருக்காக ரஜினி படத்தை பார்ப்போம். இது 100 பாட்ஷாவுக்கு சமம். ஜெயிலரை விட அருமையாக இருக்கிறது என்றெல்லாம் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

rajinikanth coolie

இந்த நிலையில் ரஜினிகாந்த் பெங்களூர் சென்றுள்ள நிலையில் அவர் ஒரு ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் படுத்துக் கொண்டே வெயிட் தூக்கும் பயிற்சியை பயிற்சியாளர் மேற்பார்வையில் செய்கிறார்.

அது போல் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்து கொள்ளும் பயிற்சியையும் செய்கிறார். 75 வயதில் சிலருக்கு நடக்கவே தடுமாற்றமாக இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் இது போன்ற உடற்பயிற்சிகளை செய்வது மிகவும் பாராட்டுதலுக்குரிய விஷயமாகும். அந்த அளவுக்கு அவர் தனது உடல்நலத்தை பேணி காக்கிறார் என பலரும் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+