"கருப்பு வெள்ளை காவி".. அப்ப இதுதான் ரஜினி கட்சிக் கொடியா??.. பரபரக்கும் அண்ணாத்த "பேக்கிரவுண்ட்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவாவின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அண்ணாத்த என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் இடம்பெற்றிருக்கும் வண்ணங்கள்தான் ரஜினி கட்சிக்கான கொடியா? என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் பொதுவாக SUPER STAR என்ற ஆங்கில எழுத்து ப்ளூ கலரில் லைட்டிங்ஸ் எழுத்துடன் ஒவ்வொன்றாக வரும். இதனையே தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து கடைபிடித்தும் வந்துள்ளன.

Rajinikanths party flag in Annaatthe announcement video?

ஆனால் இம்முறை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் SUPER STAR RAJINIKANTH என்ற டைட்டில் கார்டு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு நட்சத்திர வடிவில் அதாவது ரஜினி ரசிகர் மன்ற கொடியின் சாயலில் சில வண்ணங்களின் பின்னணியில் இந்த டைட்டில் கார்டு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வண்ணங்களை உற்றுப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் இது அதுவா? என்கிற கேள்வி எழாமல் இருக்காது.

தமிழக சட்டசபை தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிடப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். ஓரிரு மாதங்களில் ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருக்கிறார். அதற்கு முன்னதாக இந்த புதிய படத்தின் பெயர் அறிவிப்பு ஒரு கட்சியின் கொடியின் பின்னணியைப் போல வெளியாகி இருக்கிறது.

இதில் கறுப்பு- வெள்ளை- சிவப்பைப் போல் தோற்றம் தரும் காவி ஆகிய நிறங்கள் இடம்பிடித்துள்ளன. தமிழகத்தில் திராவிட அரசியலை வெளிப்படுத்துகிற வகையில் கறுப்பும் சிவப்பும் இருந்து வருகின்றன. திராவிடம் பேசுகிற அரசியல் கட்சிகள் கறுப்பு சிவப்பு வெள்ளையின் அடிப்படையில்தான் கட்சி கொடிகளை அமைக்கின்றன.

இதே திராவிட சாயலில் அதே நேரத்தில் தோன்றக் கூடிய ஆனால் சிவப்புக்கு பதில் ரஜினிக்கு மிகவும் பிடித்தமான, அவரது சிந்தனைக்கு நெருக்கமான காவி நிறம் இடம்பெற்றிருக்கிறது. ஆகையால் இதுதான் ரஜினிகாந்தின் புதிய கட்சியின் கொடியாக இருக்குமோ என்கிற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.

அது கட்சி கொடியாக இருக்காது; ரஜினி ரசிகர் மன்றத்தின் கொடியில் இடம்பெற்ற வண்ணங்களைத்தான் மாற்றி அமைத்திருக்கிறார்கள் என அவரது ரசிகர்கள் இப்போதே இந்த சந்தேகங்களுக்கு பதில் கொடியும் பிடிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+