குருமூர்த்தி என்ன இப்படி சொல்றாரே.. அப்படீன்னா "அதுக்கு" வாய்ஸ் தரப் போறாரா ரஜினி?
ரஜினியின் அரசியல் முடிவு குறித்து குருமூர்த்தி ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "1996 போல வாய்ஸ் கொடுப்பார் ரஜினிகாந்த்" என்று குருமூர்த்தி கூறியுள்ளார். அப்படி அவர் வாய்ஸ் கொடுத்தால் அது எடுபடுமா என்பது ஒரு பக்கம்.. அதேசமயம், யாருக்கு அவர் வாய்ஸ் கொடுப்பார் என்பது அடுத்த கவலை.
ரஜினிகாந்த்தைப் பொறுத்தவரை அவர் சொன்னதைக் கேட்ட தமிழகம் இப்போது இல்லை என்பதே எதார்த்தம். இது ரஜினிக்கு தெரியுமா என்று தெரியவில்லை... காரணம் 1996ம் ஆண்டு அவர் சொன்னபோது ஒட்டுமொத்த மாநிலமும் அப்படியே கேட்டது. அவர் கை காட்டிய திமுக - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தது.. ஜெயலலிதா தோற்கடிக்கப்பட்டார்.

ஆனால் அதே ரஜினி கொடுத்த பாமகவுக்கு எதிரான வாய்ஸ் அப்படியே உல்டாவாகி போனது. ஒரு தொகுதியில் கூட ரஜினிக்கு மக்கள் ஆதரவு தரவில்லை.. மாறாக பாமகவை மொத்தமாக தேர்வு செய்து ஏமாற்றம் அளித்தனர். அதன் பின்னரும் கூட ரஜினி நிறைய வாய்ஸ் கொடுத்துள்ளார்... அவை எல்லாமே அவருக்கு எதிராக போனதுதான் மிச்சம்.
இந்த முறை அவர் நேரடியாக தனக்கே வாய்ஸ் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் அவர் மன்னிப்பு கேட்டு விட்டு போய் விட்டார். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் மூழ்கியுள்ளனர். இந்த நிலையில் குருமூர்த்தி ஒரு ட்வீட் போட்டுள்ளார். ரஜினி அறிக்கையின் முதல் பாராவிலிருந்து கடைசி பாரா வரை படித்து பார்த்த அவர், கடைசி பாராவை மட்டும் டக்கென்று தூக்கி அதை வைத்து ஒரு டிவீட் போட்டுள்ளார்.
அந்தக் கடைசி பாராவைப் பார்த்தீங்களா.. அரசியலுக்கு வராவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன் என்று ரஜினி சொல்லியுள்ளார். எனக்கென்னவோ அவர் 1996ம் ஆண்டு ஏற்படுத்திய தாக்கத்தை 2021லும் செய்வார் என்றே தோன்றுகிறது என்று சொல்லியுள்ளார் குருமூர்த்தி.

ஆக, ரஜினிகாந்த் யாருக்கோ வாய்ஸ் தரப் போகிறார்.. எதையோ பேசப் போகிறார் என்பது மட்டும் தெளிவாகி விட்டது. அதுதொடர்பான அறிக்கையும் கூட ரெடியாகி இருக்கலாம்.. அதுதான் குருமூர்த்தி இவ்வளவு தெளிவாகச் சொல்கிறாரே!
ஆனால் ரஜினி வாய்ஸ் எடுபடுமா என்பதுதான் கேள்விக்குறியானது. அவர் யாருக்கு வாய்ஸ் கொடுத்தாலும் அதை ரசிகர்கள் முதலில் ஏற்பார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. நிச்சயம் இந்த வாய்ஸ் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அது வந்த பிறகுதான் கணிக்க முடியும்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications