இன்னும் முழுசா அரசியல்ல ஈடுபடல.. எல்லாம் வீட்டுக்கு போங்க.. மறுபடியும் முதல்ல இருந்தா ரஜினி?
நடிகர் ரஜினிகாந்த் இன்னும் முழுதாக அரசியலில் ஈடுபடவில்லை என்று கூறிய கருத்து வைரல் ஆகியுள்ளது.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்னும் முழுதாக அரசியலில் ஈடுபடவில்லை என்று கூறிய கருத்து வைரல் ஆகியுள்ளது.
இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு விளக்கம் அளித்தார்.
7 பேர் குறித்து தனக்கு தெரியும் என்றும், தான் ஒன்றும் முட்டாள் இல்லை என்றும், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் ரஜினி குறிப்பிட்டார். மேலும் பாஜக பலசாலி கட்சி என்று மறைமுகமாக குறிப்பிட்டார்.
[ஆஹா.. ரஜினி என்ன சொல்றார்னு பார்த்தீங்களா.. இதை விட கிளியரா சொல்லவே முடியாது! ]

அரசியல் கருத்து
அவர் தனது பேட்டியில் பாஜக ஆபத்தான கட்சியா இல்லையா என்ற எனது கருத்தை நான் இப்போது சொல்ல முடியாது என்று கூறினார். மேலும் 10 கட்சிகள் சேர்ந்து பாஜகவை எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி என்று நீங்களே தீர்மானியுங்கள். நான் முழுமையாக இன்னும் அரசியலில் இறங்கவில்லை. அன்றாட நிகழ்வுகளுக்கு நான் கருத்து கூற முடியாது. என்னிடம் அதையெல்லாம் எதிர்பார்க்காதீர்கள், என்று கூறினார்.

கவனிக்க வேண்டியது
இதில் ரஜினி குறிப்பிட்டதில் அதிகம் கவனிக்க வேண்டியது என்றால், அது ரஜினியின் அரசியல் வருகை பற்றிய நிலைப்பாடுதான். அவர், நான் இன்னும் முழுதாக அரசியலுக்கு வரவில்லை. அதனால் அன்றாட விஷயங்கள் குறித்து என்னிடம் கருத்து எல்லாம் கூற வேண்டாம் என்று கூறியுள்ளார். அதாவது இன்னும் முழுதாக அரசியல் பக்கமே வரவில்லை என்று கூறியுள்ளார்.

அதிர்ச்சியோ அதிர்ச்சி
இது ரஜினியின் உயிர் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்து இருக்கிறது. அரசியல் குறித்து தீவிரமாக பேசுவார், தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றுவார் என்று நினைத்தவர்களுக்கு இது பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது. அட இவர் எப்போதுதான் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து பேசுவார், எப்போதுதான் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று நினைக்கும் அளவிற்கு ரசிகர்கள் சென்று இருக்கிறார்கள்.

பெரிய சந்தேகம்
ரஜினியின் பிறந்த நாளுக்கு இன்னும் ஒருமாதம்தான் இருக்கிறது. ரஜினி அப்போது அரசியல் கட்சியை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எல்லோரும் நினைத்தார்கள். தற்போது ரஜினி இப்படி பேசி இருப்பதால், அப்போது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
