சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. ரஜினி என்ன சொல்றார்னு பார்த்தீங்களா.. இதை விட கிளியரா சொல்லவே முடியாது!

Google Oneindia Tamil News

Recommended Video

    7 தமிழர், பாஜக, 2.0 பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்!-வீடியோ

    சென்னை : 10 பேர் ஒருத்தரை எதிர்த்து யுத்தத்திற்கு போனால் யார் பலசாலி என்று மெகா கூட்டணி பற்றிய கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

    சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் 7 பேர் விடுதலை பற்றி கேட்ட போது யார் அந்த 7 பேர் என கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இது குறித்து சென்னை போயஸ்கார்டன் வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது : விமான நிலையத்தில் கேள்வி கேட்ட போது தெளிவாக ராஜீவ் கொலை வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் 7 பேர் என்று கேட்காமல் எடுத்த எடுப்பிலேயே 7 பேர் விடுதலை என்று கேட்டதால் 'எந்த 7 பேர்' எனக் கேட்டேன்.

    அதற்காக 7 பேர் யாரென்றே தெரியாத அளவிற்கு முட்டாள் இல்லை. என்னைப் பொருத்த வரையில் தெரியும் என்றால் தெரியும் என சொல்வேன், தெரியாது என்றால் தெரியாது என சொல்வேன். பேரறிவாளன் பரோலில் வெளிவந்திருந்த போது அவருடன் 10 நிமிடங்களுக்கு மேல் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினேன்.

    ரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்!ரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்!

    எதிர்க்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி தான்

    எதிர்க்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி தான்

    பாஜக பற்றி கேட்டார்கள், எல்லா கட்சிகளும் பாஜகவை தோற்கடிக்க ஒன்று சேர்கிறார்களே அது ஆபத்தா என்று கேட்டனர். நான் அதற்கு என்ன பதில் சொன்னேன், எதிர்க்கட்சிகள் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் , எதிர்க்கட்சி அப்படி நினைக்கும் போது பாஜக அவர்களுக்கு ஆபத்தான கட்சி தான். பாஜக ஆபத்தான கட்சியா இல்லையா என்பதை ஜனங்க முடிவு செய்வார்கள்.

    திரிக்காதீர்கள்

    திரிக்காதீர்கள்

    எந்த கருத்தையும் திரித்து கூற வேண்டாம். நான் சொல்வது அனைத்தும் வீடியோவாக இருக்கிறது எனவே திரிச்சு போட வேண்டாம். எதிர்க்கட்சி ஆபத்தான கட்சி என நினைத்தால் அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தான்.

    முழு நேர அரசியல்வாதியாகவில்லை

    முழு நேர அரசியல்வாதியாகவில்லை

    பாஜக ஆபத்தான கட்சியா இல்லையா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். என் கருத்தை இப்போது நான் சொல்ல முடியாது நான் இன்னும் முழுவதுமாக அரசியலுக்கு வரவில்லை. இதை மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன், இன்னும் எத்தனை முறை சொல்வது முழுநேர அரசியலில் இறங்கும் போது அதைப் பற்றி சொல்வேன்.

    10 பேர் ஒன்று கூடினா பலசாலியா

    10 பேர் ஒன்று கூடினா பலசாலியா

    மெகா கூட்டணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த ரஜினி, 10 பேர் ஒன்றாக சேர்ந்து ஒருவரை எதிர்த்து போகிறார்கள் என்றால் யார் பலசாலி, அந்த 10 பேரா அல்லது 10 பேரை எதிர்த்து நிற்கும் ஒருவர் பலசாலியா. 10 பேர் ஒருவரை எதிர்த்து யுத்தத்திற்கு போனால் யார் பலசாலி என்று பார்த்துக் கொள்ளுங்கள். அரசியல் கட்சியாக நான் தொடங்கியபின்னர் பாஜகவுடன் கூட்டணி வைப்பேனா இல்லையா என்பதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

    English summary
    Actor Rajinikanth says BJP is stronger party thats why aginst this party 10 number of parties joining together to form grand alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X