Rajinikanth: ரஜினிகாந்த் வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும்.. ஆவேசமான அமைச்சர் ஜெயக்குமார்
Recommended Video
சென்னை: தேவையில்லாமல் பேசுவதற்கு பதில், நடிகர் ரஜினிகாந்த் வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார்.
துக்ளக் ஆண்டுவிழாவில் சமீபத்தில் பங்கேற்று உரையாற்றிய ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் போது, ராமர் மற்றும் சீதை உருவப்படங்கள் நிர்வாணமாக கொண்டு வரப்பட்டதாகவும், செருப்பால் அடிக்க பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அவ்வாறு செருப்பால் அடித்த சம்பவம் நடைபெறவில்லை என்று பெரியார், இயக்கங்களும், திராவிட இயக்கங்களும், ரஜினிகாந்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

ஜெயக்குமார் பேட்டி
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் பேசியதற்கான ஆதாரம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி உள்ள அவுட்லுக் இதழில் இடம் பெற்றுள்ளதாக கூறினார். எனவே, தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் அதிரடியாக தெரிவித்துவிட்டார்.

மலிவான அரசியல்
இந்த விஷயம் மேலும் சூடாகி கொண்டிருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ரஜினிகாந்தை விளாசித் தள்ளிவிட்டார். ஜெயக்குமார் பேசுகையில், 1971இல் நடைபெறாத ஒன்றை, நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். இது மலிவான அரசியல்.

நடைபெறவில்லை
1971இல் நடைபெறாத விஷயத்தை பேசி ரஜினி மக்களை திசை திருப்புகிறார். தேவையில்லாத ஒன்றை பேசுவதற்கு பதில் ரஜினி வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும். துக்ளக் பத்திரிக்கையில் வந்த செய்திக்கு அவுட்லுக் பத்திரிக்கை எப்படி ஆதாரமாக இருக்க முடியும்? எத்தனை ரஜினிகள் வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது.

ஓபிஎஸ் புகழாரம்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பார்த்து அதிமுகவுக்கு எந்த பயமும் கிடையாது. திமுகவுக்கு வேண்டுமானால் பயம் இருக்கலாம். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில். என்னை போன்றவர்கள் இவ்வளவு உயரமான இடத்திற்கு வருவதற்கு பெரியார் ஒரு முக்கியமான காரணம் என்று தெரிவித்திருந்தார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?












Click it and Unblock the Notifications