அப்படியே சீமான் பாணியில்.. ரஜினியின் அரசியல் வருகை ஆரம்பம்.. திரும்பி பார்க்க வைத்த லைவ்.. தடபுடலாக!
சீமான் பாணியில் நேரடி லைவ் நிகழ்ச்சியை கையில் எடுக்கிறார் ரஜினிகாந்த்
சென்னை: சீமானை சுத்தமா ஆகவே ஆகாது என்று சொல்லிவிட்டு... அவர் பாணியிலேயே ரஜினியின் அரசியல் வருகை ஆரம்பமாகி உள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது!
Recommended Video
ரஜினிகாந்த்தை எப்போதுமே சீண்டி கொண்டிருப்பவர் சீமான்.. ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்றால் போதும் சீமான்தான் முதலில் டென்ஷன் ஆவார்.
ஆனாலும் ரஜினியை தவறாக விமர்சிக்க வேண்டாம் என்று அவரது தம்பிகளுக்கு அட்வைசும் தந்துள்ளார்.. ஒருமுறை பேசும்போது, "ரஜினிகாந்த் மேல எனக்கு மதிப்பு உண்டு, ஆனால், அவர் மண்ணில், மராட்டியத்தில், கர்நாடகத்தில் போய் கட்சி ஆரம்பித்தால், அவரை வாழ்த்தி நான் போய் பேசுவேன். அப்படி வாழ்த்தும்போது என்னை மாதிரி யாரும் பேச முடியாது. ஆனால், என் நிலத்தில் மானத்தமிழ் மண்ணை ஆள மராட்டியர் நினைப்பது மிகப்பெரிய தவறு! என்றும் தெரிவித்தார்.

யூடியூப்
இப்படி ரஜினிகாந்த் அரசியல் குறித்து ஆரம்பத்தில் இருந்தே ஏற்று கொள்ளாத கட்சிதான் நாம் தமிழர்.. ஆனால் நாம் தமிழரின் பாணியையே தன்னுடைய அரசியல் வருகைக்கும் பின்பற்றி பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்துள்ளார் ரஜினிகாந்த்! அதுதான் யூடியூப் நேரலை நிகழ்ச்சி!

டிவி இல்லை
ரஜினிக்கென்று தனியாக டிவி இல்லை... ஒரு டிவி ஆரம்பிப்பதாக சொன்னார்கள்.. அது என்ன ஆனது என்று தெரியவில்லை.. மேலும் ஊடகங்கள் மீதும் ரஜினிக்கு பெரிய நம்பிக்கை இல்லை. இந்த நிலையில் தனது முதல் மிகப் பெரிய பிரஸ்மீட்டை யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ரஜினி தரப்ப முடிவு செய்துள்ளது... இது முழுக்க முழுக்க நாம் தமிழர் டகட்சியின் பாணி ஆகும். சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சி எப்போதுமே டாப்பில் இருக்கும்.

சீமான்
சீமானின் பல பேட்டிகள், அனல்தெறிக்கும் பேச்சுக்கள், கட்சி வாரியாக கிழித்து தொங்கவிட்ட கருத்துக்கள் என எல்லாமே யூடியூபில்இன்று வரை சக்கை போடு போடுகின்றன. அவரது பேச்சுக்கள் காட்டுத் தீ போல வைரலாக அவரது யூடியூப் ஒளிபரப்பு மிக முக்கியக் காரணம்.. திராவிட கட்சிகளே இந்த பேச்சுக்களை கண்டு அரண்டு போனதும் உண்மைதான்.. இதை புரிந்து கொண்டுதான், இன்று ரஜினிக்கும் கூட அதே பாணியில் யூடியூபை ஒளிபரப்புக்கு கையில் எடுத்துள்ளனர்.

மக்கள் - ரஜினி
எந்த செய்தி சேனல்களை நம்புவது, யார் எப்படி செய்திகளை திரித்து போட்டு விடுவார்கள் போன்றவற்றை நினைத்துகூட, சேனல்களை நம்பியிருக்காமல் லைவ்-வாக களத்தில் இறங்குகிறார்கள்.. ஒருவகையில், நேரயாக மக்களை அணுகும் போக்குதான் இது.. நல்ல விஷயமும்கூட.. இந்த லைவ் நிகழ்ச்சியால் யாராலும் எந்த அனுமானத்தையும், யூகத்தையும் வெளியிட முடியாது.. ரஜினி என்ன நினைக்கிறார், என்ன பேசுகிறார் என்பதை கண்கூடாகவே மக்கள் புரிந்து கொள்ள முடியும்.
ஆக... சீமானின் பாணி என்றாலும், மக்கள் - ரஜினி இவர்களுக்குள் நடக்கும் நெருங்கிய நிகழ்வாக இது வெளிப்படுகிறது!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications