சென்னை போயஸூக்கு அமித்ஷா போகவில்லை... ஹோட்டல் லீலா பேலஸுக்கு வருவாரா ரஜினிகாந்த்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்திக்க அவரது போயஸ் கார்டன் வீட்டுக்கு செல்லவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதனால் அமித்ஷா தங்கும் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலுக்கு ரஜினிகாந்த் வருவாரா? என்கிற எதிர்பார்ப்பு பாஜகவினரிடம் எழுந்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் களத்தில் அத்தனை கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

தமிழக பாஜகவும் தேர்தலை முன்வைத்து தடையை மீறி வேல் யாத்திரை நடத்தும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகை தருகிறார்.

அமித்ஷா நாளை சென்னை வருகை

அமித்ஷா நாளை சென்னை வருகை

நாளை சென்னை வரும் அமித்ஷா அரசு நிகழ்ச்சிகளும் பாஜக நிகழ்வுகளிலும் பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சென்னையில் நாளை இரவு லீலா பேலஸ் ஹோட்டலில் அமித்ஷா தங்குகிறார்.

போயஸ் கார்டன் போகவில்லை

போயஸ் கார்டன் போகவில்லை

நாளை மறுநாள் காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் அமித்ஷா. சென்னைக்கு அமித்ஷா வருகை தரும் போது பல்வேறு அரசியல் பரபரப்புகள் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தை அமித்ஷா சந்திக்கக் கூடும் என முதலில் செய்திகள் வெளியாகின.

ரஜினி தயக்கம் காரணம்

ரஜினி தயக்கம் காரணம்

ஆனால் அரசியல் கட்சியை தொடங்க தயங்கும் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்திப்பதை அமித்ஷா தரப்பு விரும்பவில்லை என கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அமித்ஷா நிகழ்ச்சி நிரல் பட்டியலிலும் ரஜினிகாந்தை சந்திப்பது தொடர்பாக எதுவும் இடம்பெறவில்லை.

அமித்ஷாவை சந்திப்பாரா ரஜினிகாந்த்?

அமித்ஷாவை சந்திப்பாரா ரஜினிகாந்த்?

இந்த நிலையில் அமித்ஷா தங்க போகும் லீலா பேலஸ் ஹோட்டலில் அவரை ரஜினிகாந்த் நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்திப்பாரா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதேபோல் வேறுசில அரசியல் பிரமுகர்களும் அமித்ஷாவை லீலா பேலஸ் ஹோட்டலில் சந்திக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+