Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

களைகட்டுகிறதா ரஜினியின் அரசியல் பிரவேசம்.. மாவட்ட செயலாளர்களை சந்திப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடனான ரஜினிகாந்த் சந்திப்பு நிறைவடைந்தது. சுமார் ஒன்றரை மணிக்கு மேலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியை தொடங்குவது எப்போது என்பது குறித்து ரஜினி ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

Recommended Video

    களைகட்டுகிறதா ரஜினியின் அரசியல் பிரவேசம்.. மாவட்ட செயலாளர்களை சந்திப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

    கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலுக்கு வருவது உறுதி என ரசிகர்கள் முன்பு ரஜினிகாந்த் தெரிவித்தார். ஆனால் 2 ஆண்டுகளாகியும் அவர் ஒரு துரும்பையும் நகர்த்தவில்லை என்பதே ரசிகர்கள் அல்லாதோரின் கருத்தாகும்.

    இந்த நிலையில் கட்சியை தொடங்குவதற்கு முன்னர் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றினார். நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என சில தேர்தல்களை தமிழகம் சந்தித்து விட்டது.

    மாநாடு

    மாநாடு

    எனினும் அவற்றில் ரஜினி சார்பில் யாரும் போட்டியிடப்படவில்லை. இந்த நிலையில் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி கட்சியை தொடங்குகிறார் என்றும் ஆகஸ்ட் மாதத்தில் திருச்சியில் மாபெரும் மாநாட்டை நடத்துகிறார் என்றும் கூறப்படுகிறது. இவற்றை ரஜினியின் நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

    திருமண மண்டபத்தில்

    திருமண மண்டபத்தில்

    ஆனால் ரஜினி இதுகுறித்து எதையும் கூறவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை ரஜினி சந்தித்தார். இன்று காலை 10 மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

    கட்சிக் கொடி

    கட்சிக் கொடி

    சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியை தொடங்குவது எப்போது என்பது குறித்தும் கட்சிக் கொடியை எப்போது அறிமுகம் செய்வது என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 4 இடங்களில் மாநாடு நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதிமுக, திமுக போன்று பூத் கமிட்டிகளை அமைப்பது குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

    இரு சட்டசபை தொகுதி

    இரு சட்டசபை தொகுதி

    தமிழகத்தில் காலியாக உள்ள இரு சட்டசபை தொகுதிகளுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. ஒரு வேளை ரஜினி ஏப்ரலில் கட்சி தொடங்கிவிட்டால் இடைத்தேர்தலில் கட்டாயம் போட்டியிட்டாக வேண்டிய சூழலுக்கு புதிய கட்சி தள்ளப்படும். இதை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+