அந்த ஒரு வார்த்தைதான் சொன்னாரு.. அதுக்காக ரஜினி உட்கார்ந்த சேர் வரைக்குமா.. விடாத நெட்டிசன்கள்
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து அளித்த பேட்டியை வைத்து ரசிகர்கள் பல வகையான மீம்ஸ்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஓராண்டுக்கு பிறகு மீண்டும் கூடிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் என்பதால் 37 மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றிருந்தனர். சுமார் 1.30 மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தியிருக்கிறார் ரஜினி. கட்சி தொடங்குவது குறித்து, தற்போதைய அரசியல் சூழல் குறித்து. கட்சியின் கொடி, பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கை வரை பல விஷயங்களை விவாதித்துள்ளார்.

பின்பு சொல்கிறேன்
இந்த கூட்டத்திற்கு பின் சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பு செய்தியாளர்களை ரஜினி சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட செயலாளர்களை சந்தித்து கலந்துரையாடினேன். மாவட்ட செயலாளர்களுடன் பேசிய போது ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை; ஏமாற்றமே. திருப்தியில்லாத, ஏமாற்றமடைந்த விஷயம் என்னவென்று பின்னாடி சொல்கிறேன்.

வெற்றிடம்
குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இஸ்லாமிய அமைப்பினருடன் கூறியிருக்கிறேன். அதற்காக பேச்சுவார்த்தை நடத்த என்னால் முடிந்த வரை உதவி செய்வதாகவும் அவர்களிடம் கூறியிருக்கிறேன்.. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது பற்றி நேரம் தான் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.
|
நெட்டிசன்கள்
ரஜினியின் இந்த பேட்டியில் அவர் சொன்ன ஏமாற்றம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் நீண்ட ஆராய்ச்சியை சமூக வலைதளங்களில் நடத்திக்கொண்டிருக்கிறார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சந்திப்பை வைத்து பல்வேறு விமர்சனங்களையும் கருத்துக்களையும் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு ரசிகர் ரஜினி உட்கார்ந்திருந்த இரட்டை சேரை குறிப்பிட்டு ரஜினி இதுவரை உட்கார்ந்த பல காட்சிகளிலும் இரட்டை சேர் இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
|
வடிவேலு பாணி மீம்ஸ்
இன்னொரு ரசிகர் தனது டுவிட் பதிவில் ரஜினிசொன்ன ஒரு விஷயத்தில் ஏமாற்றம் உள்ளது. அதை பின்னர் சொல்கிறேன் என்று கூறியதை குறிப்பிட்டு வடிவேலு பாணியில் அப்படி என்ன தான் ஏமாற்றம் என்று மீடியாக்கள் தவிப்பது போல் மீம்ஸ் போட்டுள்ளார். இப்படி பலரும் பல வழிகளில் ரஜினியை வைத்து மீம்ஸ் பதிவிட்டு வருகிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications