துரைமுருகன்னு ஒருத்தர் இருக்காரு.. சீனியர்களை கலாய்த்த ரஜினி.. வெடித்துச் சிரித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையிலேயே திமுக சீனியர்களை கலாய்த்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். நேற்று மாலை நடந்த அமைச்சர் எ.வ.வேலுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரஜினி, முதல்வர் ஸ்டாலினை வெகுவாகப் பாராட்டியதோடு, சீனியர்களை வைத்து வேலை வாங்கும் ஆற்றலையும் வியந்து பேசினார்.
அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவானர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நூலின் முதல் பிரதியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் நூலை பெற்றுக்கொண்டார். முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். பின்னர் மூத்த பத்திரிகையாளர் என்.ராம், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் நூல் குறித்து பேசினர். இந்த நிகழ்வில் மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், திமுகவினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், உலகத்திலேயே இதுவரை யாரும் கொண்டாடாத வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை தி.மு.கவினர் கொண்டாடியது போல் எந்த அரசியல் தலைவருக்கும் இப்படி விழாவை யாரும் கொண்டாடி இருக்க மாட்டார்கள். கொண்டாடவும் முடியாது. திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி கண்டவர் மு.க.ஸ்டாலின். அவரின் அரசியல் ஆளுமை உழைப்புதான் இந்த வெற்றிக்கு காரணம்.
மார்க்சிம் கார்க்கி எழுதிய 'தாய்’ காவியத்தை அனைவரும் படிக்க வேண்டும். இந்நூலை படித்து முத்தமிழறிஞர் கண்ணீர் வடித்து பகிர்ந்துள்ளார். இந்த நூலுக்கு இணையாக 'கலைஞர் எனும் தாய்’ காவியத்தை படைத்து இருக்கிறார் எ.வ.வேலு. ஏவி விட்டால்தான் எல்லோரும் வேலை செய்கிறார்கள். ஆனால் ஏவி விடாமலே வேலை செய்பவர் எ.வ.வேலு. இதனை நான் சொல்லவில்லை. கலைஞர் கருணாநிதி சொன்னார்.
அரசியலில் உதயநிதி செயல்பாடு எப்படி? மேடையில் ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை! பூரித்துப்போன ஸ்டாலின்
கலைஞர் ஆலமரம். அதனால்தான் அவரை யாராலும் அசைக்க முடியவில்லை. அவரது உடன் பிறப்புகள் வேர்போன்று இருக்கிறார்கள். கலைஞரை பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். இன்னும் பல நூல்கள் கலைஞர் பற்றி வரும். கலைஞரை பற்றி படம் எடுக்க வேண்டும். விமர்சனம் செய்யுங்கள். ஆனால், யார் மனதையும் நோகடிக்காதீர்கள்.

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு, அவர் சந்தித்த எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இது அவரது ஆளுமையை வெளிப்படுத்தும் விஷயம். முதல்வர் பதவியை கட்டிக் காக்க பக்கத்து மாநிலங்களில் எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால், அதனை சாதாரணமாக கையாள்கிறார் ஸ்டாலின். பள்ளியில் புதிய மாணவர்களை சமாளிப்பது எளிது. ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். இங்கே ஏகப்பட்ட பழையவர்கள் இருக்கிறார்கள். சும்மா ஃபெயில் ஆகிவிட்ட மாணவர்கள் அல்ல.. பயங்கரமாக ரேங்க் எடுத்து அசத்திய பழைய மாணவர்கள் அவர்கள்.

கருணாநிதியுடன் இருந்த மூத்த அமைச்சர்களை சமாளிப்பது கடினம். அதிலும் குறிப்பாக துரைமுருகன் என்று ஒரு பழைய மாணவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். அவரிடம் ஒரு விஷயம் குறித்து அறிவுரை கேட்டால், அதற்கு அவர் தரும் பதில் நமக்கு புரியவே புரியாது. அவர்களை வைத்து வேலை வாங்குவது, ஸ்டாலின் சார் ஹேட்ஸ் ஆஃப் டு யூ” எனச் சிரித்தபடி பேசினார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் பேச்சால் அரங்கு முழுவதும் பெரும் சிரிப்பலை எழுந்து கலகலப்பு ஏற்பட்டது. திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் விழுந்து விழுந்து சிரித்தனர். மேடையில் இருந்த முதல்வர் ஸ்டாலினும், ரஜினியின் பேச்சை ரசித்துச் சிரித்தார்.
-
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன?












Click it and Unblock the Notifications