அரசியலில் உதயநிதி செயல்பாடு எப்படி? மேடையில் ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை! பூரித்துப்போன ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் எவ வேலு எழுதியுள்ள ‛கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது அவர் அமைச்சர் உதயநிதியை பற்றி புகழ்ந்து பேசிய நிலையில் மேடையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் பூரித்துப்போனார்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியுடனான தனது நினைவுகளை 'கலைஞர் எனும் தாய்' எனும் பெயரில் நூலாக எழுதியுள்ளார் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எவவேலு. இந்த நூல் வெளியீட்டு விழா இன்று மாலையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

Rajnikanth udhyanidhi stalin stalin

இந்த விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அதேபோல் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்றார்.

அதன்பிறகு அமைச்சர் எவ வேலு எழுதிய ‛கலைஞர் எனும் தாய்' நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார். அதன்பிறகு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றி பெருமையாக சில விஷயங்களை கூறினார். இதுதொடர்பாக ரஜினிகாந்த் தனது பேச்சின் தொடக்கத்தில் கூறியதாவது:

என்னுடைய பாசத்துக்குரிய, இப்போது தான் கொஞ்சம் நாள் அரசியலுக்கு வந்து கடினமாக உழைத்து பேச்சில் தனக்கென பாணியை உருவாக்கி கொண்டு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பெயர், புகழ் பெற்று தனக்கொரு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கு என்று நிரூபிக்கும் அன்பு தம்பி உதயநிதி ஸ்டாலின்'' என்று புகழ்ந்தார்.

முன்னதாக விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்து என்.ராம் ஆகியோர் ஆய்வுரை வழங்கினர். நூலை எழுதிய அமைச்சர் எ.வ.வேலு ஏற்புரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்து என்.ராம் ஆகியோர் ஆய்வுரை வழங்கினர். நூலை எழுதிய அமைச்சர் எ.வ.வேலு வேலு ஏற்புரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+