நம்மளை தெருவில இழுத்துவிட்டவங்களே இப்படி கொச்சையாக அசிங்கப்படுத்துறாங்களே...செம ஷாக்கில் ரஜினி
சென்னை: அரசியல் களம் எனும் தெருவுக்கு வந்தாக வேண்டும் என ஒவ்வொரு நிமிடமும் நெருக்கடி கொடுத்தவர்களே இப்போது மிக மோசமாக கொச்சைப்படுத்தி விமர்சித்தி வருவது நடிகர் ரஜினிகாந்தை ரொம்பவே அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.
நடிகர் ரஜினிகாந்த் என்கிற தனிமனிதருக்கு அரசியல் ஆசைகள் துளிர்விட்ட தருணங்கள் உண்டு. அது அத்தனை மனிதர்களுக்கும் இயல்பானது.

இமேஜ் அறுவடை
ஆனால் கட்டாயம் நீங்க அரசியலுக்கு வந்தாக வேண்டும் என அவரது சூப்பர் ஸ்டார் இமேஜை முன்வைத்து அறுவடை செய்ய கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர முயற்சிகள் நடந்தன. இதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளும் ஏராளம்.

அரசியல் நுழைவு
இதனால் வேறுவழியே இல்லாமல் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலுக்கு வருவேன் என்றார். ஆனால் தமிழகத்தின் களநிலவரம் தெரியாமல் மேம்போக்காக ரஜினி தெரிவித்த கருத்துகள் மக்களிடத்தில் இருந்து அவரை மிகவும் அன்னியப்படுத்திவிட்டன. இதனால் அவர் அரசியல் கட்சியை தொடங்காமலேயே இருந்தும் வந்தார்.

என்னா ஆட்டம்
இருந்தபோதும் தேர்தல் நெருங்கிவிட்டது.. எப்படியாவது கட்சியை தொடங்கியேதான் ஆக வேண்டும் என வழக்கம் போல நெருக்கடி கொடுத்தனர். கொரோனா அச்ச சூழலிலும் கூட இந்த நெருக்கடிக்கு உடன்பட்டவராக இருந்தார் ரஜினி. இதனால் அவருக்கு நெருக்கடி கொடுத்து அரசியல் களத்துக்கு இழுத்து வந்த அத்தனை கூட்டமும் ஒருசேர கூடி கும்மாளமிட்டது. எதிர்க்கட்சிகளை ஏகடியம் பேசினர்.

குட்பை சொன்ன ரஜினி
இப்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலை சுட்டிக்காட்டி தம்மால் அரசியலுக்கு வர முடியாது; மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பகிரங்கமாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத அவரை இழுத்துவிட்ட கூட்டம், இப்போது எந்த அளவுக்கு கீழிறங்கி அர்ச்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு விமர்சிக்கின்றனர். சமூக வலைதளங்களில் ஊடகங்களில் எத்தனை இழிவுபடுத்த முடியுமோ அத்தனை இழிவுபடுத்துகின்றனர்.

அதிர்ச்சியில் ரஜினி
தனக்கு நெருக்கமானவர்கள் என காட்டிக் கொண்ட இந்த கூட்டமே இப்படி செய்கிறதே என்பதுதான் ரஜினிக்கு கடுமையான அதிர்ச்சியை கொடுத்திருக்கிறதாம். நெருக்கடிக்குள்ளாகாமல் மக்களின் மனநிலைக்கு ஏற்ப நடந்து கொண்டிருந்தால் சினிமாவை போல நம்மை கொண்டாடி இருப்பாங்க இந்த ஜனங்க என ஆதங்கப்பட்டும் கொண்டார் ரஜினிகாந்த் என அவரது நீண்டகால விசுவாசிகள் கூறுகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications