ஒரே ஒரு போட்டோவை போட்டு வைரல் ஆக்கிய ரஜினி - கேளம்பாக்கத்தில் இப்போ வாக்கிங்

போயஸ்கார்டன் வீட்டில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்குத்தான் ஓய்வெடுக்க போயிருக்கிறார். மாஸ்க் போட்ட ஒரே ஒரு போட்டோவை போட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி விட்டார் ரஜினகாந்த்,

Subscribe to Oneindia Tamil

சென்னை: போயஸ்கார்டன் பங்களாவில் பல மாதங்கள் தங்கியிருந்ததால் ஒரு மாற்றத்திற்காக கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் மகள், மருமகன், பேரனுடன் ஓய்வெடுக்க போயிருக்கிறார் ரஜினி. இதற்குத்தான் காரில் மாஸ்க் போட்டுக்கொண்டு காரில் போயிருக்கிறார். இந்த போட்டோ தற்போது வெளியாகி இருக்கிறது. அங்கே அவ்வப்போது வாக்கிங் போகும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

ரஜினி அமைதியாக இருந்தாலும் செய்தி வீட்டை விட்டு கிளம்பினாலும் செய்தி மெழுகுவர்த்தி ஏற்றினாலும் அது செய்தி. காரில் மாஸ்க் போட்டு கிளம்பினாலும் அது வைரல்தான். ரஜினிகாந்த் என்றைக்கு அரசியல் பேச ஆரம்பித்தாரோ அன்றில் இருந்தே அவரது ஒவ்வொரு பேச்சையும் நடவடிக்கையையும் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.

Rajinikanth went in his Lamborghini and with whom?

அப்படித்தான் ரஜினி லம்போர்கினி சொகுசு காரில் மாஸ்க் போட்டுக்கொண்டு டிரைவ் செய்த போட்டோ வெளியான உடனேயே #ThalaivarRide # Lion in Lamborghini என்ற ஹேஸ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். ட்விட்டரே பரபரப்பில் பற்றிக்கொண்டது.

ஆடி அமாவாசை நாளில் ரஜினிகாந்த் திடீரென்று எங்கே போனார் ரஜினி. கட்சி ஆலோசனையா? சினிமா ஆலோசனையா என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது.

Rajinikanth went in his Lamborghini and with whom?

போயஸ்கார்டனில் இருந்து காரில் கிளம்பிய ரஜினிகாந்த், கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு ஓய்வெடுக்க போயிருக்கிறார். அவருடன் சவுந்தர்யா அவரது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோரும் போயிருக்கிறார்கள். காரிலிருந்து இறங்கி குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட போட்டோவும் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நகரத்தின் மத்தியில் இருக்கும் போயஸ்கார்டன் வீட்டினை விட கேளம்பாக்கம் பண்ணை வீடு அதிக மன அமைதியைத் தரும் இடமாகும். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் வந்து இங்குதான் ஓய்வெடுப்பாராம். இப்போதும் அதே போல கிளம்பிப் போய்விட்டார் ரஜினிகாந்த். அங்கே அவ்வப்போது வாக்கிங் போகும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+