ஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான்.. ரஜினி மீண்டும் மன்னிப்பு கேட்பார்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
நடிகர் ரஜினிகாந்த் உண்மை தெரிந்ததும் மன்னிப்பு கேட்பார் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உண்மை தெரிந்ததும் மன்னிப்பு கேட்பார் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது தொடர் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ராமருக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இதில் ராமருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. சீதை புகைப்படம் எடுத்து செல்லப்பட்டது, இது மிகவும் தவறு என்று ரஜினி குறிப்பிட்டார்.
நடிகர் ரஜினி காந்த் பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது.பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது, என்றுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முக்கியமாக அரசியல்வாதிகள், திரை உலகினர், தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

உதயநிதி கருத்து
இந்த நிலையில் நடிகர் ரஜினியின் கருத்து குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அரசியலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்னும் முழுமையாக வரவில்லை. அவ்வப்போது அவர் தவறாக கருத்து தெரிவித்து வருகிறார். பெரியார் குறித்து ரஜினி பேசியதில் உண்மை கிடையாது.

ரஜினி
பெரியார் குறித்து நடிகர் ரஜினிக்கு ஒன்றும் தெரியவில்லை. உண்மை தெரியாமல் அவர் எதை எதையோ பேசுகிறார். அவர் தான் பேசியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மன்னிப்பு
உண்மை தெரியாமல் பேசும் ரஜினி, தெரிந்த பிறகு மன்னிப்பு கேட்பார். அவர் ஏற்கனவே இப்படி மன்னிப்பு கேட்டு இருக்கிறார், காவிரி விவகாரம் குறித்து முன்பு தவறாக பேசினார். பின் அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார். அதேபோல் மீண்டும் மன்னிப்பு கேட்பார்.
|
முரசொலி கருத்து
முன்னதாக முரசொலி குறித்த கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கடுமையாக பதில் அளித்து இருந்தார். அவர் தனது டிவிட்டில், முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். , என்று குறிப்பிட்டு இருந்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications