Rajinikanth: ரஜினிகாந்த் தமிழகத்தை ஆள அனுமதிக்க முடியாது.. பாரதிராஜா ஆவேசம்
சென்னை: தமிழகத்தை ஆள ரஜினிகாந்த்தை அனுமதிக்க முடியாது என்று, இயக்குநர் பாரதிராஜா ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: உங்கள் பூமியை ஆள்வதுபோல, எங்கள் பூமியை தமிழர் ஆள வேண்டும். மராட்டிய மாநிலத்தை மராட்டியர் ஆள்கிறார், கர்நாடகாவில் கன்னடர்தான் முதல்வர். அசாமில், அசாம் மாநிலத்தவர்தான் முதல்வர். ஏன் எங்களுக்கு எங்கள் மண்ணின் மைந்தர் முதல்வராக கூடாது?

பழைய மோசமான முன் உதாரணத்தை வைத்து, அவர் முதல்வரானார்.., இவர் ஏன் ஆகக்கூடாது என கேட்க கூடாது. முன்பு தமிழர்கள் ஏதோ தெரியாமல் தூக்கி சுமந்தார்கள். முன்பு வெள்ளையன் ஆட்சி நடந்தது, இங்கே ஒரு வெள்ளையர் முதல்வராக இருந்தால் நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதேநேரம், ரஜினிகாந்த் தொடர்புடைய விழாக்களில் பங்கேற்கிறீர்களே என்ற கேள்விக்கு, அவர் ஒரு நல்ல மனிதர். எளிமையின் உச்சம். ரொம்ப அற்புதமானவர். நண்பர். அந்த அடிப்படையில், விழாக்களில் பங்கேற்கிறேன், என்றார். தமிழ் தேசிய கருத்துக்களை பாரதிராஜா தொடர்ந்து தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, மற்றொரு இயக்குநர், பிரவீன் காந்தி, அளித்த பேட்டியில், பாரதிராஜா ஒருமூத்த இயக்குநர். அவரது வார்த்தை கவனிக்கப்படும். அதை பாரதிராஜா புரிந்து கொள்ளவில்லை. ரஜினிகாந்த் வெறும் நடிகர் இல்லை. மக்களை நல் சிந்தனையோடு வாழ வைக்க விரும்பும் ஒரே தலைவர் ரஜினிகாந்த்தான். மற்றவர்கள் மக்களை வாக்கு வங்கியாகத்தான் பார்க்கிறார்கள்.
பாரதிராஜா ஒப்புக்கொள்ளாவிட்டாலும், மக்கள், ஏற்றுக் கொண்டனர். 2021ல் ரஜினிகாந்த்தான் முதல்வர் என்பது எழுதப்பட்ட விதி. அதை பாரதிராஜா பேட்டி மாற்றிவிட முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Recommended Video
-
"காதல் ஓவியம் கண்ணனை ஞாபகம் இருக்கா?"43 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி.. ராதா சொன்ன விஷயம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications