சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ட்விட்டரில் டிரென்டாகி வரும் #RajiniWithIndianMuslims.. பாட்ஷா ஸ்டில் ரஜினியை கொண்டாடும் ரசிகர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை - ரஜினி கருத்து

    சென்னை: இந்திய முஸ்லிம்களுடன் ரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் தற்போது ட்விட்டரில் டிரென்டாகி வருகிறது.

    குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லீம்களுக்கு பிரச்சினையை கொடுக்காது என ரஜினிகாந்த் கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு அரசியலுக்கு வரபோகும் ரஜினிக்கு முஸ்லீம்களின் ஆதரவு கிடைக்காமல் போகும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் #RajiniWithIndianMuslims என்ற ஹேஷ்டேக்கை ரஜினி காந்த் ரசிகர்கள் டிரென்டிங்கில் வைத்துள்ளனர்.

    ரஜினி... தொடரும் தெருவோர பேட்டிகள்.. எப்ப சார் வீட்டுக்குள் கூப்பிடுவீங்க.. ஏக்கத்தில் நிருபர்கள் ரஜினி... தொடரும் தெருவோர பேட்டிகள்.. எப்ப சார் வீட்டுக்குள் கூப்பிடுவீங்க.. ஏக்கத்தில் நிருபர்கள்

    அவசியம்

    தலைவா குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தெளிவான விளக்கத்தை அளித்துள்ளீர்கள். இவை அனைத்தும் உங்கள் உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள் என இந்த வலைஞர் மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை என்பது குறித்து அதன் அவசியம் குறித்து ரஜினி காந்த் பேசியதை குறிப்பிட்டுள்ளார்.

    ரஜினி

    நான் நேர்மையாக வரி செலுத்தி வருகிறேன். தவறான செயல்களில் ஈடுபடவில்லை. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை. அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நான் அவர்களுக்கு குரல் கொடுப்பேன். போராட்டத்தை தொடங்குவதற்கு முன்னர் மாணவர்கள் முழு விவரத்தையும் ஆராய்ந்து இறங்க வேண்டும் என ரஜினி கூறியதை இவர் கூறுகிறார்.

    ரஜினி காந்த்

    ரஜினி காந்த் எப்போதும் முஸ்லீம்களிடம் இரக்க குணமும் பரிவும் கொண்டவர். மற்றவர்கள் எல்லாம் தசாவதாரம், விஸ்வரூபம், அன்பே சிவம் என இந்துக்களின் பெயர்களை வைத்துள்ளனர். ஆனால் ரஜினிகாந்தோ பாட்ஷா என பெயரிட்டிருந்தார். இது ஒரு பிளாக்பஸ்டர் படமாக ஆனது என ரஜினி காந்தின் பாட்ஷா பட போட்டோவை போட்டுள்ளார் இந்த வலைஞர்.

    யோசிக்க வேண்டும்

    தலைவர் ரஜினி காந்த் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டார். முஸ்லீம்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என கூறியுள்ளார். இதுதான் ஆன்மீக அரசியல். போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் மாணவர்கள் பல முறை யோசிக்க வேண்டும் என்கிறார் இந்த வலைஞர்.

    English summary
    Netisans making #RajiniWithIndianMuslims trending in twitter after he expresses his comment over CAA, NPR, NRC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X