அப்பா, ஒவ்வொரு நொடியும் என் இதயத்தில் இருக்கிறீர்கள்! ராஜீவ்காந்தி பிறந்தநாளில் உருகிய ராகுல்
சென்னை: ‛‛அப்பா, ஒவ்வொரு நொடியும் என் இதயத்தில் இருக்கிறீர்கள். நாட்டிற்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்ற நான் முயற்சிப்பேன்'' என மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் அவரை நினைத்து மகன் ராகுல்காந்தி உருக்கமாக கூறியுள்ளார்.
Recommended Video
இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் டெல்லி உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இன்று மரியாதை செலுத்தினார்கள்.

ராகுல் காந்தி மரியாதை
ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான ராகுல்காந்தி, மற்றும் ராஜீவ் காந்தியின் மகளும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி ராஜீவ்காந்திக்கு மரியாதை செலுத்தினார்கள். காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ட்விட்டரில் உருக்கம்
இந்நிலையில் தான் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தந்தை ராஜீவ் காந்தியை நினைத்து உருக்கமாக பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛அப்பா, ஒவ்வொரு நொடியும் என்னுடன் என் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நாட்டிற்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்ற நான் முயற்சிப்பேன்'' என உருக்கமாக கூறியுள்ளார்.

வீடியோ பதிவு
மேலும் ராகுல்காந்தி அந்த பதிவில் தந்தை ராஜீவ் காந்தியின் நினைவாக வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ 59 வினாடிகள் ஓடுகிறது. அதில் ராகுல்காந்தியுடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் இருக்கும் காட்சிகள் உள்ளன. மேலும், ராஜீவ்காந்தி மக்களுடன் பழகியது, அரசியல் பயணங்கள், பிரதமர் பதவியேற்பு தொடர்பான காட்சிகள் உள்ளன.

கட்சி அலுவலகங்களில்...
ராகுல்காந்தி பகிர்ந்த இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியினர் தற்போது ஷேர் செய்து வருகின்றனர். மேலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கட்சி அலுவலகங்களில் ராஜீவ் காந்தியின் படத்துக்கு மலர்தூவி காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications