Nallakannu: நல்லகண்ணுவின் இறுதி நிமிடங்கள்! அதிகாலை முதல் என்ன நடந்தது? மருத்துவமனை விளக்கம்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானதை அடுத்து அவரது உடல்நிலைக்கு என்ன ஆனது என்பது குறித்து ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 01.02.2026 அன்று நல்லக்கண்ணு அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தது.

பல்துறை மருத்துவக் குழு தீவிர சிகிச்சையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.
அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லக்கண்ணு அவர்கள் 25.02.2026 அன்று பிற்பகல் 1.55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், உறவினர்களுக்கும் இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், அவரது சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவக் குழுக்களுக்கும், தமிழக அரசுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் உடல்நலம் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன் தினம் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்லகண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நல்லகண்ணு உடல்நலம் குறித்து
முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
காலை முதலே அவருக்கு கொடுத்த மருந்துகள் ஏற்கவில்லை என்கிறார்கள். இதனால் முக்கிய உறுப்புகள் செயலிழந்து பிற்பகல் 1.55 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு இன்றைய தினம் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
நாளை அவரது உடல் அவரது விருப்பப்படி மருத்துவ ஆராய்ச்சிகாக சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் நல்லகண்ணு. ராமசாமி- கருப்பாயி தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். பாரதியாரின் புரட்சிப் பாடல்களினாலும் வ.உ.சிதம்பரனாரின் இயக்கத்தின் வாயிலாகவும் சுதந்திர வேட்கை கொண்ட நல்லகண்ணு, மாணவ பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர்.
இரண்டாம் உலகப் போரின்போது இந்தியாவில் உணவுப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது பத்தினிக் கோட்டம் என்ற இடத்தில் பதுக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை மீட்டு அதிகாரிகளின் உதவியுடன் ஏழை, எளியவர்களின் பசியை போக்கினார்.
'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1948 ஆம் ஆண்டில் முன்னெடுத்தது. இதனால் அக்கட்சியை தடை செய்ததுடன் நல்லகண்ணுவை கைது செய்த காவல்துறையினர் சித்ரவதை கொடுத்தனர். அவரை தலைகீழாக தொங்கவிட்டு அடித்தும் வாய் திறக்க மறுத்த நல்லகண்ணுவின் மீசையை ஒவ்வொன்றாக பிடுங்கி கொடுமைப்படுத்தினர். அன்று முதல் அவருக்கு கடைசி வரை மீசையில்லாமல் இருக்க இதுதான் காரணம். பணம், பதவிக்கு ஆசைப்படாதவர், தமிழக அரசின் தகைச்சால் விருதுடன் கிடைத்த ரூ 10 லட்சத்தை கொரோனா நிதியாக கொடுத்தவர் நல்லகண்ணு! இப்படிப்பட்ட மனித கடவுள் இயற்கையுடன் முடியும் வரை போராடி தனது மூச்சை நிறுத்திக் கொண்டது!
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications