பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோல் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு.. உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை: பேரறிவாளனுக்கு மேலும் 1 வாரம் பரோல் நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனுக்கு இன்றுடன் பரோல் நிறைவடைந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி பரோல் வழங்கப்பட்டது. உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு உச்ச நீதிமன்றம் பரோல் வழங்கியது.

பேரறிவாளன் தரப்பு 90 நாட்கள் பரோல் கேட்ட நிலையில், தமிழக அரசுக்கு பேரறிவாளனுக்கு பரோல் வழங்க மறுத்து இருந்தது. ஏற்கனவே ஜனவரி மாதம் முந்தைய பரோல் முடிந்த காரணத்தாலும், வெளியே கொரோனா காலம் என்பதாலும் பேரறிவாளனுக்கு பரோல் கொடுக்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்தது.
ஆனால் பேரறிவாளனுக்கு உடல்நிலை மோசமாக இருந்த காரணத்தால், சிகிச்சையை காரணம் காட்டி அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. இந்த பரோல் இன்றோடு முடியும் நிலையில், தற்போது பேரறிவாளனுக்கு மேலும் 1 வாரம் பரோல் நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளனின் உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமாக இருக்கிறது. அவர்கள் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும்போது அவருக்கு உரிய பாதுகாப்பினை வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
பொதுவாக ஆயுள் தண்டனை கைதிகளுக்கு ஒரு வருடத்தில் ஒரு முறை பரோல் கிடைத்தால் மீண்டும் 2 வருடம் கழித்தே பரோல் கிடைக்கும். ஆனால் பேரறிவாளன் உடல்நிலை காரணமாக அவருக்கு மீண்டும் பரோல் வழங்கப்பட்டு அது மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தன்னை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications