Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''தவெகவின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா என்னை பற்றி கூறியது உண்மைக்கு மாறானது. காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்'' என்று நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தான் தவெகவினர் மீண்டும் ரஜினிகாந்தை சீண்ட தொடங்கி உள்ளனர். அதன்படி பாஜக கூட்டணியில் உள்ள சரத்குமார், ரஜினிகாந்தை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று கூறிய வீடியோவை பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் ரஜினி ரசிகர்களுக்கும், தவெகவினருக்கும் சமூக வலைதளங்களில் சண்டை உச்சமடைந்துள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் சமீபத்தில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி தமிழக அரசை கண்டித்து தவெகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தவெகவினர் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது.

rajnikanth-condemned-aadhav-arjuna-speech-tvk-party-members-and-vijay-fans-attacks-super-star

ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ''ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் விரட்டியது திமுக தான். திமுகவின் மிரட்டலுக்கு பயந்து அரசியலுக்கு வராமல் போன ரஜினி திமுக குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களிலே நடிக்கும் நிலைமைக்கு போய்விட்டார்.

விஜய்க்கு மன தைரியம் அதிகமாக இருப்பதால் தான் அவர் அரசியலில் இறங்கியிருக்கிறார்'' என்று கூறினார். ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சு ரஜினிகாந்த் ரசிகர்களை கோபப்படுத்தியது.

ரஜினிகாந்த் அறிக்கை

ராஜினிகாந்த் ரசிகர்கள் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை கண்டித்ததோடு, தவெகவை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதற்கிடையே தான் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு திமுக, அதிமுக, பாஜக உள்பட பல கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் தரப்பில் எந்த ரியாக்சனும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தான் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு ரஜினிகாந்த் இன்று கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்

அந்த அறிக்கையில், ''தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் ஆதவ் அர்ஜுனா அண்மையில் என்னை பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, விசிக தலைவர் தொல் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, அர்ஜுன மூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்டோருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்'' என்று கூறியுள்ளார்.

தவெகவை புறக்கணிக்க சொல்லும் ரஜினி?

ரஜினிகாந்த் அறிக்கையில் காலம் பேபசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் ரஜினிகாந்த் ரசிகர்கள் உள்ளனர். இதனால் அவர்கள் தவெகவிற்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்பதை ரஜினிகாந்த் மறைமுகமாக கூறியுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதோடு அவரது அறிக்கையில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் பெயர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ளவர்கள் என்பதால் ரஜினிகாந்தின் ஆதரவு என்டிஏ கூட்டணிக்கு செல்கிறதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினியை சீண்டும் தவெகவினர்

இது தவெகவினரை கோபப்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் ரஜினிகாந்தை தவெகவை சேர்ந்தவர்கள் மீண்டும் சீண்ட தொடங்கி உள்ளனர். குறிப்பாக தற்போது பாஜகவில் செயல்பட்டு வரும் சரத்குமார் பேசிய வீடியோவை தோண்டி எடுத்து இதற்கு எப்போது கண்டனம் தெரிவிப்பீங்க என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அதாவது 2018 ல் மே மாதம் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்தது. முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார்.

தூத்துக்குடி விவகாரத்தை..

அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்த நிலையில் அவர்களை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், '' மக்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் கலவரம் ஏற்பட்டது. தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்து விட்டனர். சமூக விரோதிகளை ஜெயலலிதா ஆட்சியின்போது எப்படி ஒடுக்கப்பட்டதோ அதேபோல் இந்த அரசும் செயல்பட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

சரத்குமார் வீடியோ

ரஜினியின் இந்த கருத்துக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், இன்னொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதுபற்றி அப்போது சரத்குமார் (பேட்டியளித்தபோது சமத்துவ மக்கள் கட்சி தலைவராக இருந்தார்) அளித்த பேட்டியில், ''தமிழகம் போராட்டக்களமாக மாறி சுடுகாடாக மாறிவிடும் என்கிறார் ரஜினி. அப்படி என்றால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்று கூறுகிறாரா? அல்லது மக்கள் போராட உரிமை இல்லை என்று ரஜினி கூறுகிறாரா? மக்களுக்கு போராட உரிமை இருக்கிறது.

அரசியலமைப்பு சட்டத்தில் பேச்சுரிமை, போராட்ட உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரச்சனையைச் சரி செய்வதை விட்டுவிட்டு மக்களை கட்டுப்படுத்த முயலக் கூடாது. ரஜினியின் பேச்சு மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. அவர் மீது உடனடியாக தேசத்துரோக வழக்கு பதிய வேண்டும்'' என்று கூறினார்.

சரத்குமார் தற்போது பாஜகவில் உள்ள நிலையில் இந்த வீடியோவை தற்போது தவெகவினர் தோண்டி எடுத்து இதுக்கு எப்போது கண்டனம் தெரிவிக்க போறீங்க? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் தற்போது தவெக மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே மோதல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+